பெரிய சிக்ஸ் அடிச்சு ஜெயிக்கிற தோனியை விட.. இந்த விஷயத்துலதான் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் – மைக்கேல் ஹசி கருத்து

0
163

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கேல் ஹசி தற்போது அதே சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகசெயல்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஹஸி மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மைக்கேல் ஹஸி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த மைக்கேல் ஹசி 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். இடையில் ஒரு வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், அதற்குப் பிறகு 2015ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடி தற்போது பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மகேந்திர சிங் தோனியின் அபிமான வீரர்களில் மைக்கேல் ஹஸியும் ஒருவர் ஆவார்.

இவர் விளையாடிய காலத்திலும் சென்னை அணி சிறப்பான வெற்றிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மைக்கேல் ஹஸி தற்போது மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது தோனியின் குணாதிசயம் எப்படிப்பட்டது என்றால் பிரதமர் முதல் டிரெஸ்ஸிங் ரூமில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் வரை அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்தும் குணாதிசயம் கொண்டவர் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

தோனியின் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும் – ஹஸி

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் எனது தேரியரில் மகேந்திர சிங் தோனியுடன் விளையாடியது முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதுகிறேன். நான் சொன்னது போல தோனி எப்படிப்பட்ட அழுத்தமான சூழ்நிலைகளிலும் பெரிய சிக்சர்களை அடித்து போட்டிகளை வெல்வதை ரசித்திருக்கிறேன். ஆனால் நான் அதை விட ஒரு சிறந்த மனிதராக அவரை நேசிக்கிறேன்.

இதையும் படிங்க:93-5.. தனி ஒரு வீரராக மேட்சை வென்ற குசால் மெண்டிஸ்.. நியூசிலாந்து தொடரை இழந்தது.. 2வது ஒருநாள் போட்டி

அவரது மிகப் பெரிய பலம் என்னவென்றால் தோனி பிரதமரிடம் பேசலாம் அல்லது ட்ரெஸ்ஸிங் ரூமில் பணிபுரியும் ஒரு துப்புரவு பணியாளரிடம் பேசலாம். அனைவரிடமும் ஒரே வழியில் பேசுவார். அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்துவார். தோனி மீண்டும் ஒரு வருடம் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று ஹசி கூறி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மகேந்திர சிங் தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு அன்கேப்டு பிளேயராக தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மகேந்திர சிங் தோனியை காண ஐபிஎல் தொடரில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -