புஜாரா 62வது சதம்.. ஆனால் இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியாது.. வினோதமான காரணம்

0
270
Pujara

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் ராய்ப்பூர் மைதானத்தில் மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

முதல் நாள் முடிவில் மும்பை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருக்கிறது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா வழக்கம்போல் அதிரடியாக விளையாடி 185 பந்துகளில் 159 ரன்கள் எடுத்தார்.

அதே சமயத்தில் பரிதாபமாக ரகானே 1 ரன்னில் வெளியேறினார். ஏற்கனவே இந்த சீசன் ரஞ்சி தொடரில் இரண்டு முறை கோல்டன் டக் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கிரிக்கெட்டில் இன்னொரு போட்டியில் ஜெய்ப்பூர் மைதானத்தில் சௌராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சௌராஷ்ட்ரா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்திருக்கிறது. சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா 230 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அவருக்கு முதல் தர போட்டியில் 62 ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான மீதம் இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி, கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடுவது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்தியா அணியில் இளம் வீரர்கள் சப்ராஸ்கான் மற்றும் ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எனவே மேலும் மேலும் இளம் வீரர்களை அணியில் சேர்ப்பது நல்ல முடிவாக இருக்காது.

இந்த நிலையில் ரகானே, புஜாரா போன்ற அனுபவ வீரர்களின் தேவை இருக்கிறது. ரகானே படுமோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்க, புஜாரா மிகச் சிறப்பாக இந்த ரஞ்சித் தொடரில் விளையாடுகிறார்.

இருந்தாலும் இவர்கள் இருவரையுமே இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியாது. ஏனென்றால் ஒன்பதாம் தேதியான இன்று இவர்கள் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் விளையாடி இருக்கிறார்கள். இன்னும் நான்கு நாட்கள் போட்டி தொடரும். அதாவது 13ஆம் தேதி வரையில்.

இதையும் படிங்க : “வெளி உலகில் 2பேர் இருக்காங்க.. ஆனா பும்ரா மாதிரி யாரும் கிடையாது” – டேல் ஸ்டெயின் பாராட்டு

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் 13ஆம் தேதிதான் துவங்குகிறது. எனவே தேர்வுக்குழு இவர்களைப் பரிசீலிப்பதாக இருந்திருந்தால், நிச்சயம் ரஞ்சி தொடரில் விளையாடாமல் நிறுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பது தெளிவாகிறது.