இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தான் தயாராக இருப்பதாக இந்திய வீரர் புஜாரா தெரிவித்திருக்கிறார். மேலும் அதற்கான எல்லா தகுதிகளையும் தான் கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்திய அணி நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக விளையாடுகிறது. மேலும் இளம் வீரர்கள் கொண்ட அணி செல்வதால் எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கிறது.
புஜாராவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
கடந்த ஆண்டு இந்தியாவிற்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தது. அந்தத் தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் விளையாடவில்லை. இந்த நிலையில் ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் என இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இப்படியான நிலையில் கூட இந்திய தேர்வுக்குழு மற்றும் கேப்டன் அனுபவ வீரர்களான உஜாரா மற்றும் ரகானவை தேர்வு செய்யவில்லை. இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த இருவருக்குமே இந்திய டெஸ்த் அணியில் வாய்ப்புகள் முடிந்து விட்டது என்று உறுதியாகவே தெரிகிறது. ஆனால் புஜாரா இன்னும் உறுதியாக தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார். மேலும் அவர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் போன் வரட்டும்
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் புஜாரா கூறும்பொழுது “இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்வது பற்றி தற்போது எந்த விதமான உறுதியும் கிடையாது. அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகம் மற்றும் கம்பீரிடம் இருந்து எனக்கு போன் வந்தால், நான் நிச்சயம் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கு தகுதியாகவும் தயாராகவும் இருப்பேன். ஆனால் அங்கிருந்து எனக்கு இன்னும் எந்த அழைப்பும் வரவில்லை”
இதையும் படிங்க : இங்கிலாந்து தொடர்ல.. இந்த 26 வயசு பஞ்சாப் பையனுக்கு வாய்ப்பு தாங்க.. தனியா ஜெயிப்பான் – ரிக்கி பாண்டிங் கோரிக்கை
“நான் இதற்கு தயாராக இருக்கிறேன். அவர்கள் அழைத்துச் செல்வார்களா என்று எனக்குத் தெரியாது. அப்படி அவர்கள் என்னை அழைத்து நான் நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தினால் அது மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். ஒரு வீரராக நீங்கள் எப்பொழுதும் உடல் தகுதி உடனும், நீங்கள் நல்ல கிரிக்கெட் செயல்திறன் உடனும் இருக்கும் பொழுது உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் நானும் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.






