இங்கிலாந்து தொடர்ல.. இந்த 26 வயசு பஞ்சாப் பையனுக்கு வாய்ப்பு தாங்க.. தனியா ஜெயிப்பான் – ரிக்கி பாண்டிங் கோரிக்கை

0
342
Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் முதல் தகுதி சுற்றும் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இவரை அனைவருக்கும் பிடிக்கும்

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “அர்ஸ்தீப் சிங் அவரை நன்றாக பக்கத்தில் இருந்து அறிந்து கொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அணியில் அவர் ஒரு சிறந்த கதாபாத்திரத்தை கொண்டிருக்கிறார். அவர் ஒரு வேடிக்கையான மனிதராகவும் அதே சமயத்தில் மற்றவர்களிடம் நிதானமாகவும் நடந்து கொள்கிறார். மிகவும் சிறந்த ஒன்று. அதன் காரணமாக இவரை எல்லோருக்கும் பிடிக்கும்”

“இந்திய டெஸ்ட் அணியில் அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டவுடன் நான் செய்த முதல் விஷயம், எங்கள் அணியை ஒன்று கூட்டி வைத்து நான் அவரை பாராட்டினேன். இந்த பாராட்டுக்கு அவர் மிகவும் தகுதியானவர். மேலும் இங்கிலாந்திலும் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

டியூக்ஸ் பந்து சரிவரும்

“நான் இந்திய அணியில் பொறுப்பில் இருந்தால் அவரை ஆரம்பத்திலேயே விளையாடும் அணியில் சேர்த்துக் கொள்வேன். அவர் மிகவும் திறமையானவர் என்பதோடு இங்கிலாந்தில் டியூக்ஸ் பந்தில் அவர் மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு இடதுகை வீரராக அவர் நிச்சயம் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். அவரை சேர்க்காவிட்டால் நான் நிச்சயம் ஆச்சரியப்படுவேன்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. எந்த வீரர்கள் பிளே ஆப்பில் விளையாடவில்லை.. சிக்கலில் மும்பை, குஜராத்

“அர்ஸ்தீப் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அங்குள்ள சூழ்நிலைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். மேலும் அவர் ஆறடிக்கும் அதிகபட்ச உயரத்தில் இருக்கின்ற காரணத்தினால் நல்ல பவுன்ஸ் பெறப் போகிறார். மேலும் இங்கிலாந்தில் 30, 40 ஓவர்கள் ஆனாலும் கூட பந்து ஸ்விங் ஆகும். பந்தை ஸ்விங்க் செய்யக்கூடிய, மேலும் இடதுகை வேகப் பந்துவீச்சாளராக இருப்பதால் அவர் மிகவும் கவனிக்கத்தக்கவராக இருப்பார் என்றும் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -