நேற்று ஞாயிறு நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எடுத்த முடிவு தவறானது என புஜாரா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணி வெறும் 16 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. டெல்லி இரண்டு போட்டியில் இரண்டு வெற்றிகளைப் பெற, ஹைதராபாத் மூன்று போட்டிகளில் இரண்டாவது தோல்வி அடைந்தது.
தவிடுபொடியான கணிப்புகள்
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் எடுத்து அதிரடியான வெற்றியுடன் தொடரை துவங்கியது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் முடிவுக்குள் அந்த அணி முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 300 உடன் எடுத்த முதல் அணியாக வந்துவிடும் என எல்லோரும் கணித்திருந்தார்கள்.
இந்த கணிப்புகளுக்கு ஏற்ற வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுப்பதற்கு எல்லா போட்டிகளிலும் முயற்சி செய்தது. ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆட சென்றதால் கடைசி இரண்டு போட்டிகளிலும் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியாமல் குறைந்த ரன்களை எடுத்து தோற்றது. நேற்றும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக விளையாட முயற்சி செய்து சுருண்டது குறிப்பிடத்தக்கது.
கம்மின்ஸ் எடுத்த முடிவு தவறானது
இது குறித்து பேசி இருக்கும் புஜாரா கூறும்பொழுது “நீங்கள் அதிரடியான முறையில் விளையாடுவதால் நீங்கள் பெற்றிருக்கும் வெற்றி என்ன? பத்து போட்டிகளில் இரண்டு போட்டிகளை இப்படி விளையாடி வெற்றி பெறுவதால் என்ன பயன்? நீங்கள் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை வெல்ல வேண்டும். அதற்கு நிலைத்தன்மையை காட்ட வேண்டும். அவர்கள் இதே முறையில் கடந்த ஆண்டு லீக் சுற்றில் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் நாக் அவுட்டில் ஒரு போட்டி தவறாக முடிய மொத்தமும் முடிந்து விட்டது”
இதையும் படிங்க : தோனிய நான் குறை சொல்ல மாட்டேன்.. ஆனா பவுலர்கள் இவங்கள பெருசாவே நினைக்காத காரணம் இதான் – ஹர்பஜன் சிங் பேச்சு
“மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பகலில் விளையாடும் போட்டியில் முதலில் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து வீச சாதகம் இருக்கும். அவர்கள் பந்து வீச முடிவு செய்யாமல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது மிகவும் தவறான முடிவு” எனக் கூறியிருக்கிறார்.






