சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த பந்து வீச்சாளர்களில் விளையாட யார் கடினமானவர்கள் என்பது குறித்து நான்கு பந்துவீச்சாளர்கள் பெயர்களை புஜாரா தெரிவித்திருக்கிறார்.
நேற்று ஒட்டுமொத்தமாக புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இளம் வீரர்களை விரும்புகிறது. இதன் காரணமாக தனக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அவர் ஓய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்.
ஸ்பின்னர்கள் இல்லை
இந்திய கிரிக்கெட்டில் சமீப காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக புஜாரா மட்டுமே இருந்து வந்தார். மற்ற வடிவங்களில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதே சமயத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்.
பெரும்பாலும் புஜாரா சுழல் பந்துவீச்சாளர்களை மிகவும் சுலபமாக எதிர்கொண்டு விளையாடியிருக்கிறார். அதே சமயத்தில் தான் விளையாட கடினப்பட்ட பந்துவீச்சாளர்களாக நான்கு வேகப் பந்து பேச்சாளர்களை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நால்வர்தான்
இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது “எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டேல் ஸ்டெயின், மோர்னே மோர்கல், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் எதிர்கொண்ட சவாலான பந்துவீச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக விளையாடுவது கொஞ்சம் கடினமாக இருந்தது”
இதையும் படிங்க : என் சாதனையை ரூட் உடைக்க 2378 ரன்தான் தேவை.. 13 வருஷத்துக்கு முன்னவே அத பத்தி சொல்லிட்டேன் – சச்சின் பேட்டி
“நான் முதலில் தோனி தலைமையில் அறிமுகமானேன். பின்பு விராட் கோலி தலைமையில் விளையாடினேன். அடுத்து ரோகித் சர்மா தலைமையிலும் விளையாடினேன். நடுவில் ரகானே தலைமையில் ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலங்கள் இருந்தது. எனவே இதில் ஒருவரை மட்டும் சிறந்தவர் என்று குறிப்பிடுவது கடினம்” என்று கூறியிருக்கிறார்.






