என் சாதனையை ரூட் உடைக்க 2378 ரன்தான் தேவை.. 13 வருஷத்துக்கு முன்னவே அத பத்தி சொல்லிட்டேன் – சச்சின் பேட்டி

0
200
Root

தன்னுடைய டெஸ்ட் அதிக ரன்கள் உலக சாதனையை ஜோ ரூட் அடிப்பதற்கு மிக அதிகபட்ச வாய்ப்பில் இருப்பது குறித்து முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் பதிலளித்திருக்கிறார்.

தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேவேளையில் ஜோ ரூட் 13 ஆயிரத்து 543 ரன்கள் எடுத்திருக்கிறார். சச்சின் சாதனையை முறியடிப்பதற்கு அவருக்கு இன்னும் 2378 ரன்கள் தேவையாக இருக்கிறது.

- Advertisement -

மிகப்பெரிய கௌரவம்

கிரிக்கெட் வடிவங்களில் ஆதி வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமானதாகவும் அதனால் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் செய்யப்படும் சாதனைகள் அனைத்தும் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. இதில் பேட்டிங் வகையில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள், அதிக அரை சதங்கள் மற்றும் சதங்களுக்கு மதிப்பு மிக அதிகம்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு குறைந்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அதிக ரன்கள் சாதனையை தற்கால கிரிக்கெட்டர் ஒருவர் முறியடிப்பது என்பது இனி முடியாத காரியம். இந்த நிலையில் அதற்கான வாய்ப்பில் இருக்கக்கூடிய ஒரே ஒரு வீரராக ஜோ ரூட் மட்டுமே இருக்கிறார். இதை அவர் செய்துவிட்டால் பிறகு யாராலும் அதை முறியடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேள்வியும் பதிலும்

கேள்வி: ஜோ ரூட் பற்றிய உங்களுடைய முதல் அபிப்பிராயம் என்ன? அவர் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் தாண்டி உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுக்கு எதிராகத்தான் முதலில் அறிமுகமானார்.

இதையும் படிங்க : ஹர்சித் ராணா vs சிராஜ்.. யார் சிறந்த டி20 வீரர்.. சிராஜ்க்கு ஆசிய அணியில் வாய்ப்பு தரப்படாதது ஏன்? ஆகாஷ் சோப்ரா கருத்து

பதில்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் 13,000 ரன்களை கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. மேலும் அவர் இன்னும் வலிமையாக இருக்கிறார். 2012ஆம் முதன்முதலாக அவரை நாக்பூர் டெஸ்ட் போட்டியில் பார்த்த பொழுது, என்னுடைய அணியினரிடம் அவர்கள் இங்கிலாந்தில் எதிர்கால கேப்டனை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினேன். ஏனென்றால் அவர் ஆடுகளத்தை புரிந்து விளையாடியதும், ஸ்ட்ரைக்கை சிறப்பாக ரொட்டேட் செய்ததும்தான். அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என எனக்கு அப்போதே தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -