விராட் இல்லை.. நீங்க நினைக்காத இவர்தான் இந்திய கிரிக்கெட்டின் மிஸ்டர் ஃபிக்ஸிட் – ஸ்டார்க் பேட்டி

0
225
Starc

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது குறித்து தான் ஆவலாக இருப்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிட்சல் ஸ்டார்க்கை வாங்கியிருக்கிறது. கடந்தமுறை அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச விலை கொடுத்து வாங்கி இருந்தது. அவர் லீக் சுற்றில் தடுமாறினாலும் நாக் அவுட் சுற்றில் மிகச்சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

மீண்டும் திரும்பி வந்த ஸ்டார்க்

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சு அமைந்திருந்தது. அவரைப் பெரிய அளவில் கணக்கில் எடுக்காத இந்திய அணிக்கு இது பெரிய பின்னடைவையும் உருவாக்கியது.

குறிப்பிட்ட அந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இவரது பந்துவீச்சில் மிகச் சிறப்பாக விளையாடி இருக்க இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெய்ஸ்வாலை வீழ்த்தி மிட்சல் ஸ்டார்க்தான் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் தொடரை இந்த முறை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்த இந்திய வீரருடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்

இந்த நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்கு மிட்சல் ஸ்டார்க் ஆர்வம் காட்டி வருகிறார். பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு களம் இறங்க இருக்கிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு காடு.. அவர் கோமாளினு சொன்னது தப்பே கிடையாது – மிக்கி ஆர்தர் பேட்டி

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் மிஸ்டர் ஃபிக்ஸிட் போன்றவர். அவர் துவக்க ஆட்டக்காரராக வந்தார், பிறகு ஆறாவது இடத்திற்கு சென்றும் விளையாடினார், மிடில் ஆர்டரில் வந்தும் விளையாடினார், பீல்டிங் செய்தார் பிறகு விக்கெட் கீப்பிங் தேவைப்படும் பொழுது அதையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் முக்கிய ரோல்களிலும் பர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார். இந்த முறை ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து விளையாட நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -