ரோகித் நிர்வாகம் செஞ்ச வேலையை செஞ்சா.. இந்தியா WTC சாம்பியன் ஆக முடியாது.. இதை செய்யணும் – புஜாரா கருத்து

0
69
Pujara

இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய நிர்வாகம் சில வேலைகளை செய்யக்கூடாது என்று புஜாரா கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக இந்திய கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்பாகவே இந்திய அணிகள் வாய்ப்பு கொடுக்கப்படாத பொழுது அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சுழல் பந்து ஆடுகளங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் ஐசிசி அறிமுகப்படுத்திய பிறகு ஒவ்வொரு அணியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த சூழ்நிலைக்கு சாதகமான முறையில் ஆடுகளங்களை தயாரித்தன. இதன்படி இந்தியா சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரித்தது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதை சிரமப்படுத்தியது.

இது குறித்து பேசி உள்ள புஜாரா கூறும்பொழுது “சுழல் பந்துவீச்சுகள் சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டது இந்திய பேட்டிங் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்பின. இதனால் இப்படி ஆடுகளம் அமைக்கப்பட்டது. ஆனால் இது கிரிக்கெட்டுக்கு ஏற்றது கிடையாது”

- Advertisement -

அதிர்ஷ்டம்தான் காப்பாற்றும்

“இப்படியான ஆடுகளங்கள் தொடர்ந்து அமைக்கப்படும் பொழுது ஒரு பேட்ஸ்மேன் ரன் எடுப்பதற்கு அதிர்ஷ்டத்தை நிறைய சார்ந்திருக்க வேண்டும் என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உங்களுடைய திறமைகள் வெளியேற்றப்பட்டு விடும். இப்படியான ஆடுதளங்களில் நீங்கள் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்”

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா ஷாகின் அப்ரிடிய வேற மாதிரி ரெடி பண்றோம்.. 2021 திரும்ப போகுது – பாக் பயிற்சியாளர் பேட்டி

“இப்போது நிலைமை வேகமாக மாறி கொண்டு இருக்கிறது. பெரும்பாலான அணிகள் சிறந்த ஆடுகளங்களில் விளையாடுகின்றன. மேலும் இந்திய அணியும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை விட்டு வெளியே வந்து நல்ல ஆடுகளங்களில் விளையாடும் என்று நம்புகிறேன். இதற்காக பந்து திரும்பவே கூடாது என்று கூறவில்லை. மிக அதிகபட்சமாக சுழலுக்கு சாதகம் இருக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -