தற்போது இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வரும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர் புஜாரா இந்திய அணிக்கு பிளான் கொடுத்திருக்கிறார்.
நடப்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு தனி ஒரு வீரராக பெரிய பிரச்சினையாக தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் இதுவரையில் மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 81.80 ரன் ஆவரேஜில் 409 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடக்கம்.
ஆஸ்திரேலியா அணியின் பலவீனம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லபுசேன் அரைசதம், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதம் அடித்திருந்த போதும், அவர்கள் தங்களுடைய வழக்கமான பார்மில் சிறப்பாக இல்லை. அவர்கள் களத்திற்கு உள்ளே வரும்பொழுது பெரிய தடுமாற்றத்துடன்தான் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு அவர்களிடம் இருந்து பெரிய அச்சுறுத்தல் இல்லை.
அதே சமயத்தில் ஹெட் மட்டுமே தொடர்ந்து இந்திய அணிக்கு பெரிய ரன்கள் எடுத்து பிரச்சினையாக இருக்கிறார். இவரை சீக்கிரத்தில் ஆட்டம் இழக்க செய்தால், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு கதவுகள் திறந்து விடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இதுதான் நடந்தது. மற்ற இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஹெட்டை சீக்கிரத்தில் வீழ்த்தி இருந்தால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில் இருந்திருக்கும்.
புஜாரா தந்த மாஸ்டர் பிளான்
இந்த நிலையில் புஜாரா ஹெட் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும்? என்று பேசிய பொழுது “ஹெட்டுக்கு எதிராக உங்கள் லைன் மிகவும் முக்கியமானது. நீங்கள் அவருக்கு மிடில்&ஆப் ஸ்டெம்ப் லைனில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். தனியாக மிடில் லைனிலோ அல்லது ஆப் ஸ்டெம்ப் லைனிலோ பந்து வீசக்கூடாது. மிடில்&ஆப் ஸ்டெம்ப் லைனில்
தான் வந்து பேச வேண்டும். இந்த லைனில் அவர் தடுமாற்றத்துடன் இருக்கிறார்”
இதையும் படிங்க : நான் ஐபிஎல்-ல் ராஜஸ்தானுக்கு 13 வயது சிறுவனை வாங்க.. முக்கிய காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன் பேட்டி
“மேலும் அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராகவும் தடுமாற்றத்துடன் இருக்கிறார். அதே சமயத்தில் அவர் தனது வழக்கமான ஷாட்டுகளை விளையாடுகிறார். நீங்கள் இப்படியான பந்தை சரியான இடத்தில் ஃபீல்டரை வைத்து தேவைக்கு வீசலாம். தொடர்ந்து இதே பந்துகளை வீச வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்போதாவது இந்த பந்தை வீசிக்கொண்டு தொடர்ந்து மிடில்&ஆப் ஸ்டெம்ப் லைனில் வீசினால், அவரை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள்” மிக அதிகம் என்று கூறி இருக்கிறார்.






