இங்கிலாந்தின் கவுன்டி தொடரில் விளையாட இது ஒன்று தான் காரணம் – இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்தது குறித்துப் பேசியுள்ள புஜாரா

0
193

கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் புஜாரா சுமாராகவே விளையாடி வந்தார் அதன் காரணமாகவே ஐபிஎல் தொடருக்கு முன்னர் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்து புஜாரா புறப்பட்டார். தற்பொழுது அங்கே சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் புஜாரா 5 போட்டிகளில் 720 ரன்கள் குவித்திருக்கிறார். அவருடைய பேட்டிங் சராசரி 120க்கு மேல் உள்ளது.

- Advertisement -

கவுண்டி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் புஜாரா இந்திய அணியில் களம் இறங்கி விளையாடப் போகிறார்.

என்னுடைய பழைய ஃபார்மை கொண்டு வர நினைத்தேன்

மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது பேசியுள்ள புஜாரா ஒருவேளை ஐபிஎல் தொடரில் நான் பங்கெடுத்து இருந்திருந்தால் நிறைய போட்டியில் விளையாடமல் போயிருப்பேன். நெட்டில் மட்டும் விளையாடி இருந்திருப்பேன். நெட்டில் விளையாடுவது மிகவும் வித்தியாசமான ஒன்று. எனவே தான் கவுண்டி தொடரில் விளையாட முடிவு செய்தேன்.

- Advertisement -

என்னுடைய பழைய ஃபார்மை மீண்டும் கொண்டுவரவே இந்த முடிவை நான் எடுத்தேன். கவுண்டி தொடர் ஆரம்பித்ததும் நான் நன்றாக விளையாட எனக்கு மீண்டும் அந்த நம்பிக்கை வந்தது. இந்திய அணியில் மீண்டும் விளையாடுவேன் என்கிற நம்பிக்கையும் எனக்குள் எழுந்தது. ஆனால் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக இந்த கவுண்டி தொடரில் நான் விளையாட சம்மதிக்கவில்லை.

என்னுடைய பழைய ரிதம் மற்றும் பழைய ஃபார்மை வெளிக்கொண்டு வருவதற்காக மட்டும் தான் இதில் விளையாட சம்மதித்தேன். நல்ல வேளையாக அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அதிக ரன்கள் அடிப்பது மட்டுமே என்னுடைய இலக்காக இருந்தது அதிக ரன்கள் என்றால் அது 100 கிடையாது 150க்கும் மேற்பட்ட ரன்கள்.

நீண்ட நேரம் நின்று அதிக ரன்கள் குவிப்பதன் மூலம் நம்முடைய கவனம் அதிகரிக்கும் என்று சொல்வதை விட நம்முடைய உடல் தகுதி என்ன என்பது நமக்குத் தெரியவரும். நல்ல உடல் தகுதி இல்லை என்றால் நம்மால் நீண்ட நேரம் நின்று நிறைய ரன்கள் குவித்து முடியாது. எனவே டெஸ்டுகளில் உடல்தகுதி மிகவும் முக்கியம் என்றும் புஜாரா கூறியுள்ளார்.