ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு முக்கியமான விஷயத்தை இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் உணர்ந்து கொள்ள வேண்டும் என இந்திய வீரர் புஜாரா அறிவுரை கூறியிருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ஜெய்ஸ்வால் மிட்சல் ஸ்டார்க் வீசிய போட்டியின் இரண்டாவது பந்தில் மார்ச் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதே ஓவரில் கில்லும் ஆட்டம் இழக்க இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இதை செய்ய முடியாது
தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்திருக்கும் ஜெய்ஸ்வால் ஒரு சதம் அடித்திருக்கிறார். மேலும் போட்டியின் முதல் பந்தில் ஒரு முறையும் இரண்டாவது பந்தில் ஒரு முறையும் ஆட்டம் இழந்து இருக்கிறார். இதில் இரண்டு டக் அவுட்டுகளும் அடக்கம். இந்த வகையில் ஒரு இன்னிங்ஸ் தவிர மற்ற இன்னிங்க்ஸ்க்களில் அவரது பேட்டிங் அணுகுமுறை சுமாராகவே இருந்திருக்கிறது.
இதுகுறித்து பேசி உள்ள புஜாரா கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவில் புதிய பந்தில் உங்களால் சரளமாக டிரைவ் விளையாட முடியாது என்று ஜெய்ஸ்வாலிடம் யாராவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். புதிய பந்தில் டிரைவ் மூலம் சில ரன்களை எடுக்க முடியும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அங்கு புதிய பந்தில் டிரைவ் விளையாடுவது கடினம்.அவர் டிரைவ் அடிப்பதற்கான பந்துகளை தேடுகிறார். நீங்கள் அப்படி அடிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு உடல் அருகில் பந்து இருக்க வேண்டும். கே.எல்.ராகுல் விளையாடுவது போல விளையாட வேண்டும்”
இந்த விஷயம் தெரிந்திருக்க வேண்டும்
“நீங்கள் டிரைவ் விளையாடுவதற்கான டெலிவரிகளை தேடும் பொழுது, நீங்கள் தவறு செய்ய ஆரம்பிக்கிறீர்கள். யாராவது அவருடைய மனநிலையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள சொல்ல வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு சில பந்துகளை தடுத்து விளையாடுவதால் எந்த பிரச்சினையும் கிடையாது. நீங்கள் எந்த பந்தை தடுக்க வேண்டும் எந்த பந்தை தாக்க வேண்டும் என்று தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : மழை வரட்டும் பரவால்ல.. இந்திய அணியை ஃபாலோ ஆன் பண்றோம்.. அப்படி ஜெயிக்கிறோம் – ஸ்டார்க் சவால்
“மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகவும் அருமையாக விதிவிலக்காக இருந்திருக்கிறது. இந்தத் தொடர் மட்டுமில்லாமல் இதற்கு முந்தைய தொடர்களையும் எடுத்து பார்க்கும் பொழுது, புதிய பந்தின் மீதான அவர் கட்டுப்பாடு மேம்பட்டு உள்ளதால், இந்தத் தொடரில் ஸ்டார்க் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.