மழை வரட்டும் பரவால்ல.. இந்திய அணியை ஃபாலோ ஆன் பண்றோம்.. அப்படி ஜெயிக்கிறோம் – ஸ்டார்க் சவால்

0
285

இந்திய அணியை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் செய்து வெற்றி பெற முடியும் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்திருக்கிறது.

- Advertisement -

சிக்கலில் மாட்டிய இந்திய அணி

இந்த நிலையில் இந்திய அணி மூன்றாம்பவது நாள் ஆட்ட நேரம் முடிவில் முக்கிய நான்கு விக்கெட்டுகளை 17 ஓவரில் 51 ரன்னுக்கு இழந்திருக்கிறது. தற்போது களத்தில் கேஎல்.ராகுல் 31 உடன் உடனும், இந்திய அணியின் கேப்டன் ரன் கணக்கை ஆரம்பிக்காமலும் களத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா அணியை விட 200 ரன்களுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே ஃபாலோ ஆனை தவிர்க்க முடியும். தற்போது இந்திய அணிக்கு ஒட்டு மொத்தமாக 246 ரன்கள் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா விருப்பப்பட்டால் தொடர்ந்து விளையாட வேண்டியதாக இருக்கும். மழை பெய்து வருகின்ற காரணத்தினால் அது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவும் அமையும்.

- Advertisement -

எங்களால் பாலோ ஆன் செய்ய முடியும்

இது குறித்து பேசி இருக்கும் மிச்சல் ஸ்டார்க் கூறும் பொழுது “எங்களிடம் இன்னும் சில கார்டுகள் இருக்கிறது. நாளைக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை ஆர்டர் செய்ய வேண்டிய இடத்தில் நாங்களே இருக்கிறோம். நாளை காலை ஆரம்பத்தில் சரியான பகுதிகளில் நாங்கள் பந்தை வைத்து சீக்கிரத்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தால், இந்திய அணியை பாலோ ஆன் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு எளிதாக கிடைக்கும்”

இதையும் படிங்க : பிரித்வி ஷாவுக்கு ஒர்க் எத்திக்ஸ் இருக்கணும்.. ஆனா அந்த விஷயத்தை அவர்கிட்ட சொல்ல முடியாது – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“முதல் இன்னிங்ஸில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்கின்ற காரணத்தினாலும், மேலும் எதிரணி முக்கிய நான்கு விக்கெட்டுகளை 51 ரன்னுக்கு இழந்திருப்பதாலும், வெளிப்படையாக எங்களுக்கு இந்திய அணியை ஃபாலோ ஆன் செய்கின்ற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாங்கள் இதை நோக்கி நாளை விளையாடுவோம்” என்று இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -