பி.எஸ்.எல் லீக்தான் பெஸ்ட்; விளையாடிய பிளேயர்ஸ்கிட்ட கேட்டுக்கோங்க – ஷாகின் அப்ரிடி அதிரடி!

0
121
PSL

பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக்குகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் நம்பர் ஒன்னாக திகழ்ந்து வருகிறது. இவர்களின் சம்பளம் வசதி பாதுகாப்பு போட்டியின் தரம் என்று ஐசிசி உலகத் தொடர்களை தாண்டி முன்னால் நிற்கிறது!

ஐபிஎல் தொடரின் வெற்றி உலகின் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களை தனியாக டி20 லீக்குகளை நடத்த வைத்து இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியா பி பி எல், வெஸ்ட் இண்டீஸ் சிசிஎல், பங்களாதேஷ் பிபிஎல், சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா என்று உலகின் பல நாடுகளும் நடத்தி வருகிறது.

- Advertisement -

இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2016-ம் ஆண்டு முதல் பிஎஸ்எல் தொடரை உள்நாட்டில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் சீக்கிரத்தில் ஆரம்பிக்கவும் இருக்கிறது. இதுவரை மொத்தம் ஏழு சீசன்கள் நடைபெற்று உள்ளது!

பி எஸ் எல் தொடரில் லாகூர் க்லண்டர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி இருந்து வருகிறார். தற்பொழுது அவர் பிஎஸ்எல் தொடரின் வேகப்பந்து வீச்சு தரம் பற்றி சில முக்கியமான கருத்துக்களை பேசி உள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
” எங்கள் பி எஸ் எல் தொடரில் விளையாடி உள்ள உலகின் எந்த சிறந்த பேட்ஸ்மேன்களும் எங்கள் தொடரின் வேகப்பந்து வீச்சு தரத்தை பெரிதாகப் பாராட்டுவார்கள்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர்
” இதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியைக் கொண்டு உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து மிகச்சிறப்பாக செய்து ஒருவரை ஒருவர் ஈர்க்கக் கூடிய ஆட்டங்களை வெளிப்படுத்துகிறார்கள். இது பாகிஸ்தான் கிரிக்கெட் சாதகமான அம்சம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்!