ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பிஎஸ்எல் தொடர்.. இந்தியாவின் எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? அணிகள் விவரம்

0
11

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இன்று முதல் தொடங்கி வரும் மே 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 34 போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கு பெறுகிறது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சூழலில் அதற்கு போட்டியாக முதல்முறையாக அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்த தொடரை நடத்துகிறது.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சதாப் கான், ஹசன் அலி ஷாகின் ஆப்ரிடி , ஹரிஷ் ராஜ் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இதைப் போன்று வெளிநாட்டு வீரர்களான டேவிட் வார்னர், வில்லியம்சன் சிக்கந்தர் ராசா, டாரல் மிட்செல் உள்ளிட்ட வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் இந்த தொடர் நடைபெறுவதால் இதன் டிவி ரெட்டிங்ஸ் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பிஎஸ்எல் தொடரில் தாங்கள் சிறப்பாக விளையாடினால் மக்கள் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு இதைத்தான் பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார்.

நேரம், எந்த சேனலில் பார்க்கலாம்:

இது தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன இஸ்லாமாபாத் யுனைடெட் அணி லாகூர் வாலாந்தர்ஸ் அணியை ராவல்பிண்டியில் பலபரீட்சை நடத்துகிறது. இந்த தொடர் தொடக்க விழா இன்று இரவு 8 மணியளவில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து முதல் போட்டி 9 மணிக்கு நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு எட்டு முப்பது மணிக்கு தொடங்கும். மாலை நேரத்தில் நடைபெறும் போட்டிகள் 4 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும்.

- Advertisement -

இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டிகளை பார்க்கலாம் இதேபோன்று ஆன்லைன் ஓடிடியில் fancode ஆப்பில் இந்த போட்டிகளை பார்க்க முடியும்

6 அணிகள் விவரம்:

கராச்சி கிங்ஸ்:
அப்பாஸ் அஃப்ரிடி, ஆடம் மில்னே, டேவிட் வார்னர், ஹசன் அலி, ஜேம்ஸ் வின்ஸ், குஷ்தில் ஷா, இர்ஃபான் கான் நியாசி, ஷான் மசூத், அமீர் ஜமால், அராபத் மின்ஹாஸ், டிம் சீஃபர்ட், ஜாஹித் மஹ்மூத், லிட்டன் தாஸ், மிர் ஹம்சா, கேன் வில்லியம்சன், பிம்ஸா மாஸ்மோன், எம்பிசா நமஸ்சன் யூசுப், ஃபவாத் அலி, ரியாசுல்லா

குவெட்டா கிளாடியேட்டர்ஸ்:
ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், அப்ரார் அஹ்மத், முகமது அமீர், ரிலீ ரோசோவ், அகேல் ஹொசைன், முகமது வாசிம் ஜூனியர், சவுத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், கவாஜா நஃபே, உஸ்மான் தாரிக், ஹசீபுல்லா கான், குர்ரம் ஷாஜாத், முகமது அபிஷ்டிஷ், குர்ரம் மென்டிஷ் கைல் ஜேமிசன், ஹசன் நவாஸ்

இஸ்லாமாபாத் யுனைடெட்:
நசீம் ஷா, ஷதாப் கான், மேத்யூ ஷார்ட், ஆசம் கான், இமாத் வாசிம், ஜேசன் ஹோல்டர், ஹைதர் அலி, சல்மான் அலி ஆகா, பெஞ்சமின் துவர்ஷூயிஸ், கொலின் முன்ரோ, ரம்மன் ரயீஸ், ஆண்ட்ரீஸ் கௌஸ், முகமது நவாஸ், சல்மான் இர்ஷாத், ரஸ்ஸி வான் டெர் டுசென், ரிலே மெரிடித், சாம் பில்லிங்ஸ், ஹுனைன் ஷா, சாத் மசூத்

முல்தான் சுல்தான்ஸ்:
முகமது ரிஸ்வான், உசாமா மிர், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, இப்திகார் அகமது, உஸ்மான் கான், கிறிஸ் ஜோர்டான், கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், ஃபைசல் அக்ரம், அகிஃப் ஜாவேத், குடாகேஷ் மோதி, ஜோஷ் லிட்டில், தயப் தாஹிர், அமீர் கான் சார்லஸ் அஸ்மத், ஷாஹித் அஸ்மத், ஷாஹித் அஸ்மத்

பெஷாவர் சல்மி:
பாபர் ஆசம், சைம் அயூப், டாம் கோலர்-காட்மோர், முகமது ஹாரிஸ், கார்பின் போஷ், முகமது அலி, ஹுசைன் தலாத், நஹித் ராணா, அப்துல் சமத், ஆரிஃப் யாகூப், மெஹ்ரான் மும்தாஜ், சுஃப்யான் முகிம், மேக்ஸ் பிரையன்ட், நஜிபுல்லா சத்ரன், அகமது டேனியல், அல்ஜாரி ஜோசப், அலி ராசா, மாஸ் சதாகத்

இதையும் படிங்க: தோனி பாய்கிட்ட அருமையான வாய்ப்ப மிஸ் பண்ணிட்டேன்.. ஸ்ரேயாஸ் வாக்குறுதி அதுக்கு கொடுத்திருக்கார் – பிரியன்ஸ் ஆர்யா பேட்டி

லாகூர் கலந்தர்ஸ்:
ஃபகார் ஜமான், ஷாஹீன் அப்ரிடி, டேரில் மிட்செல், ஹாரிஸ் ரவூப், சிக்கந்தர் ராசா, குசல் பெரேரா, அப்துல்லா ஷபீக், ஜஹந்தத் கான், ஜமான் கான், டேவிட் வைஸ், ஆசிப் அப்ரிடி, ஆசிப் அலி முகமது அக்லக், ரிஷாத் ஹொசைன், முஹம்மது நயீம், சல்மான் அலி கியூரான், முஹம்மது சி மிர்ரா

- Advertisement -