இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மகாராஷ்டிரா புனே மைதானத்தில் துவங்குகிறது. இதற்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
இரு அணிகளும் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் பேசும்பொழுது சுப்மன் கில் காயம் குணமடைந்து விளையாடுவதற்கு தயாராக இருப்பது ஓரளவுக்கு உறுதியாக தெரிந்தது. எனவே அவர் நாளை களமிறங்க மிக அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.
நாளை கில் களம் இறங்கினால் நிச்சயமாக கேஎல்.ராகுல் நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது. சர்பராஸ் கான் சதம் அடித்திருக்கும் காரணத்தினால் அவர் தொடர்ந்து விளையாடும் அணியில் இடம் பிடிப்பார். அதே சமயத்தில் குல்தீப் யாதவ் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் நியூசிலாந்து அணியில் முக்கிய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அடுத்து வாஷிங்டன் நன்றாக பேட்டிங் செய்வார்.
தற்போது புனே மைதானத்தின் ஆடுகளும் மெதுவானதாக சுழல் பந்துவீச்சுக்கு சாதாரணமாக அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதன் காரணமாக மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே அவருக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. முகமது சிராஜை உடனடியாக நீக்குவது கடினம்.
இதையும் படிங்க : கேப்டன்சி விட்டு தூக்கி.. ரோஹித்துக்கு மும்பை நல்ல விஷயம் பண்ணிருக்கு.. இதனால அவரு வேற டீம் போககூடாது – ஆஸி பிராட் ஹாக் பேட்டி
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.