கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

நாளை நியூசிக்கு எதிராக உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. ஹர்திக் பாண்டியா இடத்தில் யார்?.. முழு அலசல்!

நாளை இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி, நான்கு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன.

நாளை இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறுவதோடு அரையிறுதி வாய்ப்பை பலமாக்கும். நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைப்பதோடு, அரையிறுதி வாய்ப்பை பலமாக்கும்.

தற்பொழுது இந்திய அணியில் மாற்று வீரரே இல்லாத ஹர்திக் பாண்டியா காயம் அடைந்திருப்பது பின்னடைவாக அமைந்திருக்கிறது. அவர் நாளைய போட்டியில் களமிறங்க மாட்டார் என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. அடுத்து இங்கிலாந்துடன் 29ஆம் தேதி லக்னோவுக்குதான் வருவார்.

- Advertisement -

இந்த நிலையில் அவருடைய இடத்தில் ஒரு ஆல்ரவுண்டரை விளையாட முடியாது. கட்டாயம் ஒரு முழுமையான பேட்ஸ்மேனை விளையாட வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இடத்திற்கு இடதுகை வீரர் இசான் கிஷான் மற்றும் வலதுகை வீரர் சூரியக்குமார் யாதவ் இருவரும் இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் மிச்சம் சான்டனர் மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவர் இருக்கிறார்கள். எனவே இவர்களை மிடில் ஓவர்களில் விளையாடுவதற்கு இடதுகை பேட்ஸ்மேன் இசான் கிஷான் சரியானவராக இருப்பார்.

இஷான் கிஷான் ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் வைத்திருக்கிறார். மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் இரண்டு போட்டிகளில் விளையாடியும் இருக்கிறார்.

மேலும் ஹர்திக் பாண்டியா வெளியேறுவதால் பந்துவீச்சு பலம் குறைகிறது. இதன் காரணமாக சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் முகமது சமி வர வேண்டியது அவசியமாகிறது. சமி வரும்பொழுது பும்ரா, சிராஜ், சமி, குல்தீப் யாதவ் ரவீந்திர ஜடேஜா என ஐந்து பந்துவீச்சாளர்கள் அமைவார்கள்.

நாளை நியூசிலாந்துக்கு எதிரான இந்திய உத்தேச பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இசான் கிஷான், கேஎல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -
Published by

Recent Posts