ஐபிஎல் 2026 சீசனில் பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டால், தன்னுடைய திறமையை நிரூபிக்குமாறு முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், வலியுறுத்தியுள்ளார். அபுதாபியில் டிசம்பர் 16-ஆம் தேதி நடக்கும் ஏலத்தில் தேர்வு பெறும் பட்சத்தில் இதைச் செய்ய வேண்டும் என்று பதான் கூறியுள்ளார்.
பிரித்வி ஷாவின் திறமையை கருத்தில் கொண்டு, முந்தைய ஏலத்தில் அவர் வாங்கப்படாமல் போனது ஆச்சரியம் என்று இர்பான் பதான் தெரிவித்தார். பிரித்வி ஷா, கடைசியாக 2024-இல் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.
அந்த சீசனிலும் அதற்கு முந்தைய சீசனிலும் பெரும்பாலும் ரன்கள் சேர்க்க முடியாமல் அவர் சிரமப்பட்டார். 2023 சீசனில் 8 போட்டிகளில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து 13.25 சராசரியுடன் இருந்தார். ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். 2024-இல் 8 போட்டிகளில் 198 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக 66 ரன்கள்.
முந்தைய ஏலத்தில் வாங்கப்படாமல் போன பிறகு, இப்போது ஐபிஎல் 2026 ஏலத்தில் 75 லட்சம் ரூபாய் அடிப்படை விலையுடன் போட்டி போடுகிறார். இது குறித்து பேசிய இர்பான் பதான், “எனக்கு பிரித்வி ஷா தான். பிரித்வி ஷா என்ற வீரரைப் பார்க்கும்போது, அவரது திறமையை ஆட்டங்களால் நிரூபிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
டி காக் வாங்குங்கள்:
அவரைப் பார்க்கும்போது, ‘இவர் திறமைவாய்ந்த வீரர், இவர் ஆட வேண்டும்’ என்று நினைக்கிறேன்.” என்று கூறினார். இந்த தொடரின் வரலாற்றில் 79 போட்டிகளில் ஷா 1892 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 23.95, ஸ்ட்ரைக் ரேட் 147.47.ஆகும். இதே போன்று மேக்ஸ்வெல்லை விடுவித்த பிறகு பஞ்சாப் கிங்ஸ் எந்த வெளிநாட்டு வீரரை இலக்கு வைக்கும் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீரர் டேல் ஸ்டெய்ன்,, “அவர்கள் டி காக் போன்ற ஒருவரை இலக்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது அங்கு அவர் நன்றாக ரன் குவிப்பார் என்று தோன்றுகிறது. மேக்ஸ்வெல் போன்ற ஒருவருக்கு மாற்றாக இருப்பார்.” என்று கூறினார்.