மக்கள் தன் குறித்து மீம்ஸ் போட்டது சில நேரத்தில் மிகவும் மனதை காயப்படுத்தியதாக இந்திய வீரர் பிரித்வி ஷா கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சச்சின் என்று பார்க்கப்பட்ட பிரித்வி ஷா முதலில் உடல் தகுதி இல்லாமலும் பின்பு ஊக்க மருந்து பிரச்சினையிலும் சிக்கி இந்திய அணிக்குள் வர முடியாமல் போனது. பிறகு உடல் தகுதி மிகவும் மோசமடைய உள்நாட்டு கிரிக்கெட்டில் சமீபத்தில் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் நடந்த சோகம்
இந்த நிலையில் தற்பொழுது மும்பை மாநில அணிகள் மீண்டும் இணைக்கப்பட்டு சையத் முஸ்டாக் அலி தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் அவரிடம் முன்பு போல அதிரடியான தாக்கம் நிறைந்த ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. டி20 கிரிக்கெட் வடிவம் என்றாலும் மிக மலிவான முறையில் விக்கெட்டை கொடுத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் 75 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய பெயரை பதிவு செய்து இருந்தார். இரண்டு மூன்று முறை அவருடைய பெயர் வந்த பொழுதும் கூட மாற்றுத் துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தில் அடிப்படை விலைக்கும் அவரை 10 அணிகளும் வாங்க முன் வரவில்லை. அவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதே இதற்கு காரணம் என்று வெளியில் பேசப்படுகிறது.
மிகவும் மனக்காயம் அடைந்தேன்
இதுகுறித்து பேசி இருக்கும் பிருத்வி ஷா கூறும் பொழுது “என்னைப் பற்றி மக்கள் மீம்ஸ் போடுவதை நானும் பார்க்கிறேன். சில சமயம் அதனால் எனக்கு மன காயம் ஏற்படுகிறது. சில சமயம் நான் தப்பாக உணர்கிறேன். பொதுவெளியில் மக்கள் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் நான் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்”
இதையும் படிங்க : பாக் அணிக்கு எதிரா இந்த விஷயத்தை கண்டுபிடிக்கவே முடியல.. மோசமான ஃபார்முக்கு காரணமே அதான் – இங்கி பேட்ஸ்மேன் பேட்டி
“இது எனது 25ஆவது பிறந்தநாள். வருடத்தில் ஒரு நாள் நான் நண்பர்கள் மற்றும் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நம் மீது ஏதும் தவறு இல்லை என்றால் நாம் அதை வெளிச்சத்தில் காட்ட வேண்டும்” என்று கூறி இருக்கிறார். மாநில அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஏதாவது வீரர்கள் காயம் அடைந்தால் இவருக்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.