இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்ற வருகிறது.
பாகிஸ்தானில் பேட்டிங் செய்த விதம் குறித்து அந்த அணியின் ஆறாவது வரிசை பேட்ஸ்மேன் ஒல்லி போப் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி அடைந்த நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தகுந்த பதிலடி கொடுத்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இந்த இரண்டு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் குவிக்க, அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. முதல் நான்கு விக்கெட்டுகள் விரைவாக வெளியேறிய நிலையில் மிடில் வரிசையில் களமிறங்கிய ஹாரி ப்ரூக் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி நல்ல ஸ்கோர் பெற உதவி இருக்கிறார்கள். இதில் ஹாரி புரூக் 132 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். விக்கெட் கீப்பர் ஒல்லி போப் 77 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் விளையாடியது குறித்து போப் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “என்னை பொருத்தவரை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் எளிதாக அமையவில்லை. நான் ஒரு வழியை கண்டுபிடித்து விளையாட எனக்கு போதுமான சமயம் அமையவில்லை. என்னை பொருத்தவரை அந்தத் தொடரை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். சரியான நேர்கோட்டில் விளையாடினால் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்குத் தெரியும்.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி 2025.. ஐசிசி வைத்த செக்.. இதுக்கு ஒத்துக்கிட்டே ஆகணும்.. வசமா சிக்கிய பாகிஸ்தான் அணி
அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் அதனை செய்துள்ளேன், மேலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி என்னால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என்று நம்புகிறேன். மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாட தொடர்ந்து முயற்சிக்கிறேன். அங்கே குறைந்த ரன்கள் அடித்திருந்தாலும் சில சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளேன். எனவே இது நான் தொடர்ந்து செய்ய விரும்பும் வேலையாகும்” என்று கூறுகிறார். ஒல்லி போப் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 55 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.