கடவுளே நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்.. என்னை ஏன் நீக்கினார்கள்? – பிரித்வி ஷா வேதனை

0
350

மும்பை மாநில அணியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் பிரித்வி ஷா மீண்டும் நீக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் வேதனையுடன் பதிவிட்டிருக்கிறார்.

இந்தியாவின் எதிர்கால பேட்ஸ்மேனாக சச்சினின் இடத்திற்கு பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, இன்று இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் போனதோடு, உள்நாட்டு மாநில அணியிலும் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரஞ்சி டிராபி நீக்கம்

இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் இருந்து இரண்டாவது கட்டத்தில் மும்பை அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்டார். உடல் தகுதி மற்றும் ஒழுக்கமின்மைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. பிறகு அவர் உடல் தகுதியில் வேலை செய்ய ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் மொத்தம் ஒன்பது போட்டிகளில் பங்கேற்று 194 ரன்கள் மட்டுமே எடுத்தார். மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த போதிலும் கூட அவருடைய செயல்பாடு சிறப்பானதாக இல்லை.

- Advertisement -

கடவுளே நான் என்ன செய்ய?

இதற்குப் பிறகு உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியில் இருந்தும் மீண்டும் நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது இவர் நீக்கத்திற்கான காரணங்கள் குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. ஆனால் அவர் உடல் தகுதி மற்றும் ஒழுக்கமின்மையின் காரணமாகவே மீண்டும் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.

இதையும் படிங்க : காபாவில் இந்த ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன்.. அதுக்கு டெக்னிக்கை இப்படி மாத்தினேன் – கேஎல் ராகுல் விளக்கம்

இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரித்வி ஷா “கடவுளே சொல்லுங்கள் நான் இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டும்? உள்நாட்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் 65 இன்னிங்ஸ்களில், 126 ஸ்ட்ரைக் ரேட் உடன், 55.7 ஆவரேஜில் 3399 ரன்கள் நான் எடுத்திருக்கிறேன். இது அவர்களுக்கு போதுமானதாக இல்லையா? ஆனால் கடவுளே நான் உங்கள் மீது நம்பிக்கை வைப்பேன். மக்களும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக திரும்பி வருவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -