14 வருடங்கள்.. சிஎஸ்கேவுக்கு நடந்த வினோத சோகம்.. பதிரனாவுக்கு முதல் சம்பவம்.. விராட் சாதனை தூள்

0
207
Arya

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. பேட்டிங் செய்ய சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இரண்டு அணிகளுமே தோல்வியில் இருந்து வருவதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கின.

- Advertisement -

பிரியன்ஸ் ஆர்யா அசத்தல் சாதனைகள்

இன்று பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கில் விக்கெட்டுகள் திடீரென தொடர்ந்து ஒரு முனையில் சரிந்தது. ஆனால் இன்னொரு முனையில் நின்ற இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா அதிரடியில் மிரட்டினார். முதல் 19 பந்தில் அரை சதம் அடித்த அவர் 39 தொடரில் தனது முதல் சதத்தை ஐபிஎல் தொடரில் பதிவு செய்தார். அவர் மொத்தம் 42 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்த இந்தியராக 39 பந்துகளில் சதம் அடித்து யூசுப் பதான் இருக்கிறார். இந்த பட்டியலில் தற்பொழுது இரண்டாவது இடத்தை பிரியன்ஸ் ஆர்யா பிடித்திருக்கிறார். மேலும் விராட் கோலி 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 13.3 ஓவரில் சதம் அடித்திருந்தார். இன்றைய போட்டியில் பிரியன்ஸ் ஆர்யா 12.5 ஓவரில் சதம் அடித்து, ஐபிஎல் தொடரில் குறைந்த ஓவரில் சதம் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

சிஎஸ்கேவுக்கு வினோத சோகம்

இதற்கு முன்பாக ஒரு அன்கேப்டு வீரர் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த சம்பவம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனது நான்காவது போட்டியில் விளையாடிய பால் வல்தாட்டி சதம் அடித்திருந்தார். தற்போது மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனது நான்காவது போட்டியை விளையாடும் அன்கேப்டு வீரரான பிரியன்ஸ் ஆர்யா சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த வினோத சோகம் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க : 6,6,6,4.. பத்திரானா பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ்.. ஐபிஎல் வரலாற்றில் அதிவேக 2வது சதம்.. பஞ்சாப் துவக்க வீரர் அபார சாதனை

மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா 50 ரன்கள் விட்டுத் தந்ததில்லை. ஆனால் இன்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி முதல்முறையாக 50 ரன்கள் விட்டுத் தந்தார். தனிப்பட்ட முறையில் அவருக்கும் இந்த போட்டி மோசமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -