48 பந்துகள் மீதம்.. 10 ரன்னை தாண்டாத 8 பேர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிரிட்டோரியஸ் அணி வெற்றி

0
87

தென்னாபிரிக்காவில் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24 வது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய கேபிட்டல்ஸ் அணி சூப்பர் கிங்ஸ் அணியை 8 ஓவர்கள் மீதம் வைத்து எளிதான வெற்றியை பெற்றது.

- Advertisement -

எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக்

செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி ஆடுகளத்தின் சூழ்நிலையை உணர்ந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனால் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் களம் இறங்கியது. ஆனால் போட்டி சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பாராத படி அமையும் என்று டுப்ளஸ்சிஸ் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இதன்படி இன்னிங்ஸ் களம் இறங்கிய கான்வே மற்றும் டூப்ளஸ்சிஸ் ஜோடி 3.3 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்திருந்த போது தனது முதல் விக்கட்டை பறி கொடுத்தது. 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டூப்ளஸ்சிஸ் தனது முதல் விக்கட்டை பறிகொடுத்தார்.

அதற்குப் பின்னர் கான்வே 9 ரன்னில் வெளியேற, மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். இதில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ மட்டும் 32 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார். மிக மோசமாக விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் குவித்தது. இதில் பந்துவீச்சில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் எட்டு வீரர்கள் 10 ரன் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் 15 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ஸ்மீத் 7 ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பிறகு கேப்டன் வெரின் மற்றும் அக்கர் மேன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய அக்கர் மேன் 22 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 39 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:நான் நினைத்த 2 விஷயம் நடக்கல.. எங்களை வீழ்த்த அவர்தான் முக்கிய காரணம் – சூர்யகுமார் பேட்டி

இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 48 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ள கேப்பிட்டல்ஸ் அணிக்கு இது ஒரு சிறந்த வெற்றியாக அமைந்திருக்கிறது. இருப்பினும் புள்ளி பட்டியலில் சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 வெற்றிகளோடு நான்காவது இடத்திலும் கேப்பிட்டல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடிய நிலையில் 2 வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -