நான் நினைத்த 2 விஷயம் நடக்கல.. எங்களை வீழ்த்த அவர்தான் முக்கிய காரணம் – சூர்யகுமார் பேட்டி

0
715

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் தோல்விக்கான காரணங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

மூன்றாவது டி20யில் இந்திய அணி தோல்வி

ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. வருண் சக்கரவர்த்தியின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இந்திய அணித்தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் 24 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்னில் நடையை கட்டினார்கள். இதில் ஹர்திக் பாண்டியா மட்டும் அதிகபட்சமாக 35 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். ஆனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே குவித்தது. பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓவர்டன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து சூரியகுமார் யாதவ்

இந்த சூழ்நிலையில் சூரியகுமார் யாதவர் கூறும் போது “நாளின் பின்பகுதியில் பணி அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் அக்சார் மற்றும் ஹர்திக் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆட்டம் எங்களது கைகளில் இருந்ததாக உணர்கிறேன். எங்களை வீழ்த்திய பெருமை அடில் ரஷீத்தையே சேரும். குறிப்பாக அவர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் எங்களை ஸ்டிரைக் ரொட்டேட் செய்ய அனுமதிக்கவில்லை. எங்கள் அணியிலும் நிறைய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா செயலால் ரசிகர்கள் அதிருப்தி.. கம்பேக் கொடுத்த இங்கிலாந்து.. 3வது டி20ல் இந்திய அணி தோல்வி

எப்போதும் நாங்கள் டி20 ஆட்டத்தில் இருந்து விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். இந்த போட்டியின் மூலமாக நாங்கள் பேட்டிங்கில் முன்னேற வேண்டும் என்பதை அறிவோம். வரைபலகைக்குச் சென்று நாங்கள் செய்த தவறுகளை மீண்டும் ஆலோசித்து தகுந்த முடிவுகளைக் கொண்டு வர வேண்டும். ஷமி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். வருண் சக்கரவர்த்தி பயிற்சி அமர்வுகளில் மிக கடினமாக உழைக்கக்கூடிய ஒரு நபர். அதனால்தான் அவருக்கு முடிவுகள் சிறப்பாக கிடைக்கிறது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -