நடப்பு ஐபிஎல் 18ஆவது சீசனில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெறுகிறது. இதற்கு இரண்டு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமைய வாய்ப்பு இருக்கிறது? என்று பார்க்கலாம்.
இதில் மிக முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் மெதுவாக பந்து வீசியதற்காக ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டதால் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயத்தின் காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என்பதும் சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணியை திடீரென பலவீனப்படுத்துகிறது.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்
மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாததால், அவர்களுடைய ஒட்டு மொத்த பிளேயிங் லெவனில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா இடத்துக்கு நியூசிலாந்தின் பெவான் ஜேக்கப் இல்லை தென் ஆப்பிரிக்காவின் கார்பின் போஸ் இருவரில் ஒருவர் விளையாடுவார்கள்.
ரியான் ரிக்கல்ட்டன், ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், பெவான் ஜேக்கப்ஸ் இல்லை கார்பின் போஸ், நமன் திர், ராபின் மின்ஸ், மிட்சல் சான்ட்னர், தீபக் சகர், கரண் சர்மா, ட்ரெண்ட் போல்ட் மற்றும் இம்பாக்ட் பிளேயர் அஸ்வினி குமார்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்
சிஎஸ்கே அணியில் முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் விளையாடுவது சந்தேகம். அதே சமயத்தில் நியூசிலாந்தின் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்த்ரா இருவரும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இத்துடன் ஜடேஜா மற்றும் அஸ்வினோடு இன்னொரு சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமத் விளையாடலாம்.
கான்வே, ருத்ராஜ், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, அஸ்வின், அன்சூல் காம்போஜ், நூர் அகமத் மற்றும் கலீல் அகமத். இதில் இம்பேக்ட் பிளேயராக பதிரனா இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விராட் கோலி கிட்ட அதை பத்தி மட்டும் பேசாதிங்க.. அவருக்காக அவ்வளவு சாட்சி இருக்கு – பியூஸ் சாவ்லா பேட்டி
இரு அணிகளையும் எடுத்து பார்க்கும் பொழுது சுழல் மற்றும் வேகம் என பவுலிங் யூனிட்டில் சமநிலையே காணப்படுகிறது. அதே சமயத்தில் பேட்டிங் யூனிட் பார்க்கும் பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியை விட சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட்டில் சீராக ரன்கள் தொடர்ந்து எடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுகிறார்கள். எனவே சிறிதளவு வெற்றி வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கூடுதலாக இருக்கிறது.






