விராட் கோலி கிட்ட அதை பத்தி மட்டும் பேசாதிங்க.. அவருக்காக அவ்வளவு சாட்சி இருக்கு – பியூஸ் சாவ்லா பேட்டி

0
75
Virat

இன்று ஐபிஎல் 18 வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி வெகுவாக வெளியில் பேசப்பட்டு வருவது அவசியமற்றது என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்திருக்கிறார்.

தற்போது டி20 கிரிக்கெட் மிகவும் அதிரடியான முறைக்கு மாறி இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலி மெதுவாக விளையாடுகிறார் என்கின்ற விமர்சனம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் தற்போது ஆர்சிபி அணிக்கு அவர் விளையாடுவதால் மீண்டும் இந்த பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

2024-ல் மாற்றிக் காட்டிய விராட் கோலி

விராட் கோலியின் 17 வருட ஐபிஎல் பயணத்தில் அவருடைய ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 131 ஆக இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட் மாறி வருவதை உணர்ந்த விராட் கோலி கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி 154 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். மேலும் இவ்வளவு சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் 741 ரன்கள் கொடுத்திருந்தார். தற்போது விராட் கோலி மற்ற இளம் வீரர்களை போல பேட்டிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பியூஸ் சாவ்லா கூறும்பொழுது “விராட் கோலி எப்போதும் அணிக்காக டெலிவரி செய்யக் கூடியவர். அவருடைய நம்பர்களை எடுத்துப் பார்த்தால் அது அவருடைய திறமையை பேசுகிறது. நாம் எப்பொழுதும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 130 முதல் 140 என மிகவும் நன்றாகவே இருந்து வந்திருக்கிறது”

- Advertisement -

அதை மறந்து விட்டு பேசுகிறோம்

“ஏனென்றால் ஒரு அணி நிர்வாகமாக உங்களுக்கு தெரியும் பேக்கிங் செய்யும் போது விராட் கோலி ஒரு முனையில் நீங்கள் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும். அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு முனையில் இருந்தால், அது அணிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். ஆனால் நாம் இதை மறந்து விட்டு யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறோம்”

இதையும் படிங்க : ஸ்பெஷல் பந்து இருக்கு.. போன முறை விராட் கோலி தப்பிச்சிட்டார்.. இப்ப விடமாட்டேன் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

“என்னைப் பொறுத்தவரை விராட் கோலி களத்தில் இறங்கினால் அவர் 200% கொடுப்பார். அவர் தனது உடலை லைனில் வைக்கிறார். எப்பொழுதுமே அவருடைய குணம் இப்படியாகத்தான் இருந்திருக்கிறது. அவர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர். அணிக்காக தன்னால் முடிந்த எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். எனது விராட் கோலி அணியில் இருப்பதே மிகச் சிறந்த விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -