2 டக் அவுட்.. சோசியல் மீடியா ட்ரோல்.. விராட் கோலி இந்த முடிவை எடுக்க மாட்டார்னு நம்புறேன் – இர்ஃபான் பதான் பேட்டி

0
104

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்று இறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை ஓரளவு எதிர்கொண்டு சமாளித்து 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி சேவியர் பார்ட் லெட்டின் நான்காவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். முதல் போட்டியிலும் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இந்த சூழ்நிலையில் தற்போது விராட் கோலி மீது வரும் விமர்சனங்கள் அவரை பெரிய விதத்தில் பாதிக்காது என்று நம்புவதாக சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும்போது “இரண்டு போட்டிகள் இரண்டு டக் அவுட் இதை நாங்கள் பார்த்ததில்லை இது அடிக்கடி நடக்காது. இது அழுத்தம் அல்லது வேறு வகையான காரணங்கள் ஏதாவது இருக்கலாம். சமூக வலைதளங்களில் தற்போது இது குறித்து பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த இரண்டு வீரர்களும் இது போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்படாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். செயல் திறன் அவர்களிடத்தில் இல்லை என்றால் நிச்சயம் அவர்கள் விளையாட மாட்டார்கள்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய வீரரை பாராட்டிய ஸ்ரேயாஸ்.. சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.. பேட்டிங்கில் மாற்றம் என கருத்து

விராட் கோலியின் ரோஹித் சர்மாவும் சிறந்த விஷயங்களை செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் தொடர்ந்து விளையாடுவது முக்கியம். அவர்கள் சிரமப்படும் பட்சத்தில் அவருக்கு மாற்ற வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார் என்பதை உணர வேண்டும். ஆனால் உங்கள் தலைக்கு மேல் ஒரு வாள் தொங்கினால் விளையாடுவது எளிதல்ல ஆனால் அது கோலியை பாதிக்காது என்று நம்புகிறேன்” என அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -