203 ரன்கள்.. டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் டூ பிளஸ்ஸிஸ் அதிரடி சதம்.. மழையால் வந்த வினை.. ஹெட் ஸ்மித் அதிரடி வீண்

0
298

ஐபிஎல் தொடர் போலவே அமெரிக்காவில் தற்போது மேஜர் கிரிக்கெட் லீக் 2024 சீசன் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும்மோதின.

- Advertisement -

ஏற்கனவே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்து இருந்த நிலையில் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கியது. மோரிஸ் வில்லே நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டெக்ஸாஸ் அணியின் கான்வே மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 109 ரன்கள் குவித்தது. 26 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த கான்வே 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒன் டவுனில் களமிறங்கிய ஆரோன் ஹார்டி இரண்டு ரன்கள் வெளியேற, அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டானிஸ் டூப்ளிசியுடன் ஜோடி சேர்ந்து டெக்ஸாஸ் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். 18 பந்துகளை எதிர் கொண்ட ஸ்டானிஸ் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என அடித்து 29 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

மறுமுனையில் அபாரமாக நிலைத்து நின்ற விளையாடிய கேப்டன் டூ பிளஸ்சிஸ் தனது கேப்டன் இன்னிங்ஸை மிக அபாரமாக விளையாடினார். தொடக்கம் முதலே வாஷிங்டன் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 58 பந்துகளை எதிர் கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர் என 172 ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் குவித்தார். சதம் அடித்த நிலையில் நெட்ரவால்கரின் பந்துவீச்சில் வெளியேற, இறுதியாக டெக்ஸாஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

வாஷிங்டன் அணியில் பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் நெட்ரவால்கர் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதற்குப் பிறகு வெற்று இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய வாஷிங்டன் அணி நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் குவித்த போது அதற்குப் பிறகு ஏற்பட்ட மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:ரோஹித் சர்மா vs தோனி.. இருவரில் யார் சிறந்த கேப்டன்.? சுவாரசியமான பதிலை கூறும் குல்தீப் யாதவ்

வாஷிங்டன் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஹெட் 12 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர் என 32 ரன்கள் குவிக்க, மறுமுலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 13 பந்துகளில் மூன்று சிக்ஸர் குவித்து 26 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். டெக்ஸாஸ் அணிக்கு தற்போது டிரா மூலம் ஒரு புள்ளி கிடைத்துள்ளது.

- Advertisement -