இந்திய கிரிக்கெட்

3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள்.. கம்பீர் மாஸ்டர் பிளான்.. முழு அலசல்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் பிப்ரவரி 12ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

- Advertisement -

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. எனவே மூன்றாவது போட்டியில் சாம்பியன்ஸ் டிராபியை மனதில் வைத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மிக முக்கியமான மாற்றம் ஒன்றை செய்து பார்க்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

கம்பீர் மாஸ்டர் பிளான்

தற்போது பும்ரா கிடைக்காவிட்டால் இந்திய பவுலிங் யூனிட்டில் எதிரணிகள் கணிக்க முடியாத ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால் வருண் சக்கரவர்த்தியை கம்பீர் கொண்டு வந்திருக்கிறார். அதே சமயத்தில் குல்தீப் யாதவ் உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். எனவே மூன்றாவது போட்டியில் ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்து இவர்கள் இருவரையும் ஒரே அணியில் விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இல்லையென்றால் ஹர்ஷித் ராணா முகமது ஷமி இவர்களுடன் அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைத்து, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டி அவர்களுக்கு ஓய்வு கொடுத்து பார்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. ஆனால் பேட்டிங் வரிசையை ஏழு வரையில் மட்டுமே வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை சேர்த்து பரிசோதனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் – ஜெய்ஸ்வால்

இந்திய அணி நிர்வாகம் ஆரம்பத்தில் ஜெய்ஸ்வாலை வைத்துக் கொண்டு ஸ்ரேயாஸ் ஐயரை வெளியில் வைக்க யோசித்தது. இந்த நிலையில் திடீரென விராட் கோலி காயம் அடைய ஸ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பை வாங்கி சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தை உறுதி செய்து விட்டார். அதே சமயத்தில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் வெளியில் வைக்க வாய்ப்பே கிடையாது.

இதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாவது போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பது கடினம்தான். ரோகித் சர்மா மற்றும் கில் இருவருக்கும் ஓய்வு தர நிச்சயம் கம்பீர் விரும்ப மாட்டார். மேலும் கே.எல். ராகுலுக்கு தேவையான அளவுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காததால், ரிஷப் பண்டுக்கும் வாய்ப்பு கிடைக்காது.

இதையும் படிங்க : அறிமுகமே அதகளம்.. 47 ஆண்டு சாதனையை முடித்துவிட்ட தென்னாப்பிரிக்கா வீரர்.. சாம்பியன்ஸ் டிராபி அணியிலேயே இல்லையாம்

இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -
Published by