ஆஸி 2வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றம்.. அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

0
1108
ICT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இதுவரை தோல்வி அடையாத அணியாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் உறுதியான இரண்டு மாற்றம்

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் நடைபெறுவது உறுதியாக இருக்கிறது. தேவ்தத் படிக்கல் வெளியேற மூன்றாவது இடத்தில் காயம் குணமான சுப்மன் கில் வருவார். மேலும் முதல் டெஸ்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத கேப்டன் ரோகித் சர்மாவும் திரும்புகிறார்.

மேலும் அணிக்கு திரும்பும் ரோகித் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேஎல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் அனுப்பப்பட்டார்கள். மேலும் மூன்றாவது இடத்தில் வழக்கம் போல் கில் வந்தார். எனவே இந்த முறை ரோகித் சர்மா துருவ் ஜுரலின் ஆறாவது இடத்தில் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

ஆடுகளத்தன்மையால் மாறாத பவுலிங் யூனிட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே முதல் போட்டியில் களம் இறங்கிய வேகப் பந்துவீச்சு கூட்டணியே களம் இறங்கும். மேலும் சுழல் பந்துவீச்சு பெரிதளவு எடுபடாது என்பதால், சுழல் பந்துவீச்சாளர்களில் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவருக்கு வாய்ப்பு தரப்படும். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தரே வாய்ப்பு பெறுவார். இந்த முறையும் அஸ்வின் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டி20.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. இந்திய அணிக்கு நெருக்கடி திட்டம்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

கே.எல். ராகுல்
ஜெய்ஸ்வால்
சுப்மன் கில்
விராட் கோலி
ரிஷப் பண்ட்
ரோகித் சர்மா
நிதிஷ்குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
நிதிஷ் ராணா
ஜஸ்பிரித் பும்ரா
முகமது சிராஜ்

- Advertisement -