இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் தலைமையில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் கம்பீர் அணியை மாற்றுவாரா? என்று பார்க்கலாம்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது மற்றும் சஞ்சு சாம்சன் என நான்கு பேர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்கள். ஆச்சரியப்படும் விதமாக ரியான் பராக் மற்றும் ரிங்கு சிங் இருவருமே அணியில் இடம் பெற்று விளையாடினார்கள்.
மேலும் நேற்றைய போட்டியில் மூன்றாவது பிரதான வேகப் பந்துவீச்சாளர் இல்லாதது கொஞ்சம் பிரச்சினையாக தெரிந்தது. எனவே கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை நீக்கிவிட்டு கலீல் அகமதுவை கொண்டு வரவும் வாய்ப்புகள் உண்டு. இல்லையென்றால் ரவி பிஸ்னாய் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் வரலாம்.
ஆனால் கூடுதல் ரியான் பராக் இருக்கிறார். மேலும் அவர் 17ஆவது ஓவரில் பந்து வீசக்கூடிய அளவுக்கு ஆடுகளம் சுழல் பந்துவீச்சு ஒத்துழைக்கிறது. ஒரே மைதானத்தில் போட்டிகள் நடக்கின்ற காரணத்தினால் ரியான் பராக் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.
இத்தோடு நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் வழக்கத்திற்கு மாறாக பொறுமை காட்டி விளையாடினார். அதன் பலனாக 33 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இது அணிக்கு மிகவும் முக்கியமாக நடு வரிசையில் அமைந்தது. எனவே இன்றைய போட்டியில் இவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. எனவே கம்பீர் இன்றைய போட்டியை வென்று தொடரை கைப்பற்றினால் மட்டுமே அணியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : 56 மேட்ச் குறைவு.. கோலியின் பிரம்மாண்ட சாதனையை செய்த சூர்யகுமார்.. டி20ல் வேர்ல்ட் ரெகார்ட்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
சுப்மன் கில், ஜெய்ஷ்வால், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.






