இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்று பார்க்கலாம்.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் போட்டியை இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர் ருதுராஜ் பொதுவாக தொடக்க வீரராக விளையாடி வரக்கூடியவர். இந்த நிலையில் அவருக்கு முதல் ஒருநாள் போட்டியில் நான்காவது இடம் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் அவரால் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியவில்லை. தற்போது இது சில கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இந்த தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் திலக் வர்மா என இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். எனவே ருதுராஜை நீக்கிவிட்டு இவர்களில் யாருக்காவது வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆனாலும் குறைந்தது இன்னும் ஒரு வாய்ப்பாவது கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முதல் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவன் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்திய தரப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது என பல முன்னாள் வீரர்களும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே வென்ற அணி உடன் இந்தியா களம் இறங்கலாம்.
இதையும் படிங்க : விராட் கோலி ஜெயிக்க கடின உழைப்பு காரணம் இல்லை.. இந்த விஷயம் தான் அவர்கிட்ட பெரிய தடையாய் இருந்துச்சு – முன்னாள் சிஎஸ்கே வீரர்
இந்திய பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ், வாஷிங்டன் சுந்தர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்சித்ரா ராணா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.