கம்பீர் செஞ்சது ரொம்ப தப்பு.. கில்லுக்கு கொடுக்கும் பாதுகாப்பு ஏன் சுந்தருக்கு கொடுக்கல.. முகமது கைப் விமர்சனம்

0
64

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிக்கட்டத்தில் பரபரப்பாக விளையாடிய வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் வாஷிங்டன் சுந்தர் விளையாடிய விதம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்காக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 5 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதற்குப் பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று விக்கெட்டுகள் சரிந்ததால் பேட்டிங் செய்ய மீண்டும் அவரே கேஎல் ராகுலுடன் களமிறங்கி விளையாடினார்.

பரபரப்பான அந்த ஆட்டத்தில் அவரால் ரன்கள் எடுக்க ஓட முடியாமல் சிரமப்பட்டது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த போட்டி முழுவதும் விளையாடவில்லை. எனவே கில்லுக்கு ஒரு நியாயம் சுந்தருக்கு ஒரு நியாயமா என கம்பீர் செய்வது சரியில்லை என்று முகமது கைப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்திருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவைப்படும்போது நீங்கள் வேறு யாரையாவது முயற்சி செய்து இருக்க வேண்டும். ஒரு வீரர் காயமடைந்திருக்கும்போது அழுத்தமான சூழ்நிலையில் அவரை களம் இறக்கினால் அவரது காயம் மேலும் மோசமடைய கூடும். வந்து டீப் ஸ்கொயர் அல்லது லெக் திசையில் பகுதிக்கு சென்ற போதிலும் அவரால் ரன் எடுக்க ஓட முடியவில்லை.

இதையும் படிங்க:விராட் கோலி இன்னும் 6 வருஷம் ஆடுவார்.. இந்த 4 விஷயத்தை நோட் பண்ணி பாருங்க புரியும் – முகமது கைஃப் பேச்சு

கே எல் ராகுல் விளையாடும்போது ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் ஒரு காயமடைந்த வீரரை திரும்ப களம் இறக்கவது சரியல்ல என்று நினைக்கிறேன். இதனால் அந்தக் காயம் 20 அல்லது 30 நாட்கள் வரை நீடிக்க கூடும் என்ற அபாயம் உள்ளது. நான் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போது வெற்றிக்கு 20 அல்லது 30 ரன்கள் தேவைப்படும் நிலையில் கில் களமிறங்கி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் காயம் மோசம் அடையாமல் இருக்க அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது ஆனால் வாஷிங்டன் சுந்தர் விஷயத்தில் இந்த அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -