தெஆ 2வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அஸ்திரத்தை மாற்றும் கம்பீர்.. வித்தியாசமாக நடக்குமா?

0
215
Varun

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை நியூ சண்டிகர் மைதானத்தில் இரண்டாவது t20 போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என பார்க்கலாம்.

இரு அணிக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 175 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 74 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு, 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை இதுவும் நடக்குமா?

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங்கை தொடர்ந்து இந்திய டி20 பிளேயிங் லெவனில் வைத்து விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மேலும் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரையும் ஒரே நேரத்தில் விளையாட வைக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டிருந்தார். முக்கியமாக வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சின் மர்மம் எதிரணிக்கு தெரியாத வகையில் அவருக்கு குறைவான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

கம்பீர் புது அஸ்திரத்தை எடுப்பாரா?

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த கோரிக்கையை மையப்படுத்தி இந்திய தலைமை பயிற்சியாளர், நாளை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி இடத்திற்கு குல்தீப் யாதவை கொண்டு வருவாரா? என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் கிரிக்கெட் வல்லுனர்கள் இந்த டி20 தொடரை வெல்லும் வரையில் கம்பீர் மாற்றம் எதையும் செய்ய மாட்டார், டெஸ்ட் தொடரை தோற்ற காரணத்தினால் டி20 தொடரை முழு பலத்தோடு வெல்ல வேண்டும் என விரும்புவார் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியே களம் இறங்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: ஆஷஸ் 3வது டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. கேப்டனாக திரும்பினார் கம்மின்ஸ்

இந்திய பிளேயிங் லெவன்: சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

- Advertisement -