IND vs PAK.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் பிரில்லியன்ட் 2 மாற்றங்கள்.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி

0
3
Bumrah

நாளை டி20 உலக கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இது பெரிய மைதானம் என்பதோடு சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தானின் வலிமை

தற்போது பாகிஸ்தான் பேட்டிங் யூனிட்டில் முதல் மூன்று வீரர்கள் அதிரடியாக விளையாடுவது திட்டமாக இருக்கிறது. மூன்றாவது இடத்திற்கு கேப்டன் சல்மான் அலி ஆகா வருகிறார். பாபர் அசாமுக்கு ஆங்கர் ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பெரிய மைதானங்களில் விளையாடுவதால் இது சரியான திட்டமாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு பின்னர்கள் கொட்டிக் கிடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய பிளேயிங் லெவனில் ஆறு ஸ்பின்னர்களை இயற்கையாக வைத்து விளையாட முடியும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இது அவர்களுக்கு பெரிய பலமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் திட்டம்

தற்போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான பெரிய மைதானத்திற்கு சென்று விளையாட இருப்பதால் அர்ஸ்தீப் சிங் இடத்திற்கு குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் இருவரையும் கம்பீர் விளையாட வைப்பதற்கு 99 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆசிய கோப்பையில் இது போன்ற அணியையே கம்பீர் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அபிஷேக் ஷர்மா விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அழுதுகிட்டே இருக்கிற குழந்தை இல்ல நீ.. எனக்கு ஹர்திக் பாண்டியா செஞ்சது பெரிய விஷயம் – இஷான் கிஷான் பேச்சு

இந்திய பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

- Advertisement -