இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மெல்போர்ன் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம் என்று பார்க்கலாம்.
நாளை பாக்ஸிங் டே டெஸ்டில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதே மைதானத்தில் 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ராவுக்கு ஓய்வு தரப்படுமா?
தற்போது நடந்து முடிந்திருக்கும் மூன்று போட்டியில் இரு அணியும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. இந்த போட்டியை வெல்லும் அணி தொடரை இழக்காத நிலைக்கு சென்று விடும். மேலும் இந்திய அணி இந்த போட்டியை வென்றால், ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் தொடரை கைவசம் வைத்திருப்பதால், மீண்டும் இந்திய அணியிடமே டிராபி வந்து விடும்.
இதன் காரணத்தால் இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட்டான பும்ராவுக்கு ஓய்வு தர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அவர் நாளை நான்காவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவது உறுதியாகவே இருக்கிறது. அதே சமயத்தில் ஆகாஷ் தீப் கடந்த போட்டியில்தான் வாய்ப்பு பெற்றார். எனவே அவரும் விளையாடுவார். சிராஜ் விளையாட முடியாவிட்டால் மட்டுமே பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு உண்டா?
இந்த குறிப்பிட்ட மெல்போர்ன் மைதானத்தை பொறுத்தவரையில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் காரணத்தால் முதல் போட்டியில் சிறப்பான அரை சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா மட்டுமே விளையாடுவார் என்று தெரிகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது.
மேலும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் பெரிதாக எந்த மாற்றங்களும் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே மாற்று பேட்ஸ்மேன்கள் ஜுரல் சர்பராஸ் கான் போன்றவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு உண்டு.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா.. அவர் இதை மட்டும் செஞ்சா போதும்.. அறிமுக வீரர் குறித்து பேட் கம்மின்ஸ் கருத்து
இந்திய பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் சிராஜ்.






