இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கட்டாக் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவல் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று துவங்குகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இரு அணிகளுக்கும் இது பயிற்சியாக முக்கியமான தொடராக அமைகிறது.
அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டி இருக்கிறது.
மேலும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக அக்சர் படேல், இத்துடன் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக அபிஷேக் ஷர்மா ஆகியோர் இந்திய பிளேயிங் லெவனில் இருப்பார்கள். இப்படி விளையாடும் அணியை அமைக்கும் பொழுது, வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இருப்பார்கள். இதன் காரணமாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு சிவம் துபே விளையாட வேண்டிய கட்டாயம் உருவாகும்.
எனவே உலகக்கோப்பையில் அமைக்கப் போகும் பிளேயிங் லெவன் பலன் தருமா? என்று பார்ப்பதற்கு, தற்போது அதே பிளேயிங் லெவனை அமைக்க கம்பீர் முடிவு செய்வார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் அர்ஸ்தீப் சிங் விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க: ஓபனிங் வீரர்களை தவிர.. மற்ற எல்லாருக்கும் பேட்டிங் வரிசை மாற்றுவேன்.. அதுக்கு காரணம் இதுதான் – கேப்டன் சூர்யா பேட்டி
இந்திய பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.