தற்போது இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம் என்று பார்க்கலாம்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 11ஆம் தேதி இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 14 மற்றும் 18ஆம் தேதிகளில் அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெற்ற தொடர் முடிவுக்கு வருகிறது.
விளையாடாத இரண்டு வீரர்கள்
இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவருக்கும் டி20 உலகக் கோப்பை மிக அருகில் இருப்பதால் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்ட பவுலிங் யூனிட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒரு நாள் தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் எட்டாவது இடத்தில் நிதிஷ்குமார் ரெட்டி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே அந்த இடத்தில் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய வேகபந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விளையாடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
திரும்பிய வீரர்கள்
மேலும் இந்த தொடரில் காயமடைந்திருந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இத்துடன் நிதிஷ்குமார், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாட வாய்ப்பு கிடைக்காது.
இதையும் படிங்க : 2, 3 தடவ நல்ல வாய்ப்பு கிடைச்சும் அதை பயன்படுத்தல.. நான் உங்களை உன்னிப்பாக கவனித்துதான் சொல்றேன்.. ருத்ராஜ் குறித்து உத்தப்பா
இந்திய பிளேயிங் லெவன்: சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.






