இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற 11-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் எதிர்பாராவிதமாக கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் ஜொலித்த ருத்ராஜ் ஜெயிக்குவாட் இந்தத் தொடரில் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இது குறித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்திய அணியை பொருத்தவரை பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் தங்கள் திறமைகளை வெளிக்காட்டாமல் போராடி வருகிறார்கள். அந்த வரிசையில் சிஎஸ்கே கேப்டனான ருத்ராஜ் ஜெயக்குவாட் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னால் முடிந்த அளவு சிறந்த பங்களிப்பை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பிடித்த தன் திறமையை நிரூபித்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் மூன்றாவது போட்டியில் சதம் அடித்து தன் இடத்தை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிர்ச்சிகரமாக அவருக்கு இடம் இந்தி அணி தரவில்லை. இதுகுறித்து உத்தப்பா சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ருத்ராஜ் இடம் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். சரியான நேரத்தில் அவர் தனது பார்மை சிறிது இழக்கிறார். இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை இரும்பு சூடாக இருக்கும் போது அடிப்பது மிகவும் முக்கியம். அவரது நேரம் இரண்டு முதல் மூன்று முறை வந்தது. அந்த சரியான சமயத்தில் அவரது பார்ம் சற்று குறைந்தது. அவரது ஃபார்ம் நிலைத்திருக்க அவருக்கான வாய்ப்புகள் திரும்ப வர, அவரது நேரம் சரியாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:நான் ரோகித்தை தான் இப்போதும் கேப்டன் என்று கூறுவேன்.. என்னால இனி அதை மாற்ற முடியாது – ஐசிசி தலைவர் பிரமிப்பு
அப்போதுதான் அவருக்கான வாய்ப்புகள் எப்போதும் இந்திய அணியில் இருக்கும்” என்று அவர் பேசி இருக்கிறார். இருப்பினும் கடைசி போட்டியில் சதம் அடித்த தனது திறமையை நிரூபித்த போதும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பெரிய ஏமாற்றம் என்று ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.






