நாளை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது? என்று பார்க்கலாம்.
கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் குல்தீப் யாதவ் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மேலும் இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, காயத்திலிருந்து குணமடைந்து வரும் முகமது சமி ஆகியோர் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் இளம் வீரர்கள் ரிஷப் பண்ட், ரியான் பராக், சிவம் துபே, ஹர்ஷித் ராணா, கலீல் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் வருவார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார்கள். மேலும் ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் விளையாடுவார்.
தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாத காரணத்தினால் இந்த இடம் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு கொடுக்கப்படும். மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கான இன்னொரு இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரியான் பாராக்கை விளையாட வைக்க கம்பீர் விரும்பலாம்.
இந்த போட்டிக்கான பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் பிரதான சுழல் பந்துவீச்சாளராக எட்டாவது இடத்தில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷித்ராணா, அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் இடம் பெறுவார்கள். இந்த 11 பேர் தவிர்த்து ரிஷப் பண்ட், கலில் அகமது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோர் வெளியில் உட்கார வைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க : 100 சதம்.. 4 வருடம்.. சச்சின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியுமா.?.. தினேஷ் கார்த்திக் தெளிவான பதில்
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரியான் பராக், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.






