இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மார்ச் இரண்டாம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடம் பெற்று இருக்கும் குழுவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்து ஏற்கனவே வெளியேறிவிட்டன. அதே சமயத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டும் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியை தவிர்த்து அடுத்து இறுதிப் போட்டியில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். அதே சமயத்தில் நியூசிலாந்து அணி துபாய் மைதானத்தில் சுழல் பந்துவீச்சை சமாளித்து விளையாடுவதற்கு சிறந்த பேட்டிங் யூனிட்டையும் அதில் மூன்று இடதுகை பேட்ஸ்மேன்களையும் வைத்திருக்கிறார்.
எனவே இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்தித்து திடீரென மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக தற்பொழுதே மாற்றங்களை செய்து பார்க்க இந்திய அணி விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி நியூசிலாந்து அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களை குறி வைத்து அவர்களுக்கு பந்தை வெளியேத்திருப்போம் வாஷிங்டன் சுந்தருக்கு ஜடேஜா இடத்தில் வாய்ப்பு கொடுக்க யோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி சம்பிரதாய போட்டி என்கின்ற காரணத்தினால் ஜடேஜா இடத்தில் வாஷிங்டன் சுந்தர், முகமது சமி இடத்தில் வருண் சக்கரவர்த்தி பரிசோதனை முயற்சியாக களம் இறக்கப்படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களையும் ஜடேஜா இடத்தில் பயன்படுத்தி, பிறகு அதில் ஒருவரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்தித்தால் களம் இருக்கலாம் என்று திட்டம் தீட்டப்படலாம்.
மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது முகமது சமிக்கு காலில் மீண்டும் கொஞ்சம் வலி இருப்பது போல் தெரிந்தது. இதன் காரணமாக அவருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவுடன் வருண் சக்கரவர்த்தி மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரையும் களம் இறக்கி, ஜடேஜா மற்றும் முகமது சமி இருவருக்கும் ஓய்வு கொடுக்க வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்படுகிறது!
இதையும் படிங்க : எங்க அணிக்கு இதை தப்பா சொல்லிக் கொடுத்த ஆள் யாருன்னு தெரியணும்.. நம்பி வீணா போச்சு – இங்கி மைக்கேல் வாகன்
இந்திய பிளேயிங் லெவன் : கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா மற்றும் குல்தீப் யாதவ்.