இந்திய கிரிக்கெட்

IND vs AUS.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. செமி பைனலில் ராணா ஆடுவாரா.. கம்பீர் பிளான் என்ன?

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் முதல் செமி பைனல் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

இந்த தொடரில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று தனது பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். குறிப்பாக நேற்று வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட் கைப்பற்றினார். எனவே அவர் நாளைய போட்டியிலும் விளையாடுவாரா? என்பதுதான் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

துபாய் மைதானம் தரும் சாதகம்

துபாய் மைதானத்தில் அதிகப் போட்டிகள் நடந்து களைப்படைந்த ஆடுகளங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக பந்து மெதுவாக வருகிறது. எனவே வேகம் மற்றும் சுழல் என இரண்டு பந்துவீச்சாளர்களுக்கும் சாதகம் இருக்கிறது. இந்திய அணி தன்னிடம் இருக்கும் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை வைத்து, வலிமையான பேட்டிங் மற்றும் பௌலிங் யூனிட்டை உருவாக்கிக் கொள்கிறது.

இதன் காரணமாகவே நேற்று ஷமி உடன் ஹர்திக் பாண்டியாவை மட்டும் வைத்துக்கொண்டு நான்காவது சுழல் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை உள்ளே எடுத்துக் கொண்டு வந்தார்கள். குறிப்பிட்ட துபாய் ஆடுகளத்திற்கு நான்கு பேர் கொண்ட சுழல் கூட்டணி பெரிய அளவில் தாக்கத்தையும் கொடுத்து வெற்றியும் பெற்றது.

- Advertisement -

கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து

எனவே இதன் காரணமாக இந்திய அணி தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இதே போல இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் என்று செல்லும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஒருவேளை ஹர்ஷித் ராணா விளையாடுவார் என்றாலும் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் யாராவது ஒருவர் நீக்கப்படுவார் என்றும் வருண் சக்கரவர்த்தி கட்டாயம் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வகையில் பார்க்கும் பொழுது இந்திய அணி நிர்வாகம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சென்ற பிளேயிங் லெவனுடன் செல்வதற்குதான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே செமி பைனலிலும் இந்திய பவுலிங் யூனிட்டில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க : சினிமாதான் என் கனவு.. கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சது இப்படிதான்.. ரொம்ப லேட் – வருண் சக்கரவர்த்தி சுவாரஸ்யம்

இந்திய பிளேயிங் லெவன்: கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி

- Advertisement -
Published by

Recent Posts