நாளை இந்தியா இங்கிலாந்து செமி-பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ரோகித் அந்த மாற்றத்தை செய்வாரா?

0
928
Rohit

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இரவு இந்திய நேரப்படி எட்டு மணிக்கு இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு மாற்றங்கள் செய்வதற்கு வழி இருக்கிறதா? இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

தற்போது இந்திய அணி எல்லா வகையிலும் சமபலம் கொண்ட அணியாக இருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் இந்திய அணிக்கு நல்ல முறையில் கை கொடுத்து வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட ஆறு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் பேட்டிங்கில் பட்லர் மற்றும் பில் சால்ட் இருவரும் அச்சுறுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த ஜோடியை சீக்கிரத்தில் வெளியேற்றும் பொழுது இங்கிலாந்து அணியை எளிமையாகக் கட்டுப்படுத்தலாம். அதே சமயத்தில் அவர்களுடைய பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத் பெரிய தாக்கத்தை உண்டாக்கக் கூடியவராக இருக்கிறார். இதன் அடிப்படையில்தான் இந்திய பிளேயிங் லெவன் அமையும்.

இந்தப் போட்டி கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானம் பொதுவாக சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியது. மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலதுகை பேட்ஸ்மேன்கள். இதன் காரணமாக இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் அணியில் இருப்பார்கள். எனவே இதன் காரணமாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு இல்லை.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணியில் அச்சுறுத்தக் கூடிய பந்துவீச்சாளராக லெக் ஸ்பின்னர் ஆதில் ரசித் இருக்கின்ற காரணத்தினால், இவரது பந்துவீச்சை அட்டாக் செய்ய இடதுகை பேட்ஸ்மேன் தேவை. எனவே தடுமாறி வரும் இடது கை பேட்ஸ்மேன் சிவம் துபேவை நீக்க மாட்டார்கள். எனவே இந்த இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை. எனவே இப்படியான காரணங்களால் இந்திய அணி பழைய பிளேயிங் லெவன் உடன் விளையாடவே 99% வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிங்க : வெளிய போனதுக்கு வருத்தமா?.. கண்ணீர் வர சிரிச்சிட்டு இருந்தேன்.. ஆனா ஆப்கான் தகுதியானது – மிட்சல் மார்ஸ் பேட்டி

2024 டி20 உலகக்கோப்பை 2வது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

- Advertisement -