வெளிய போனதுக்கு வருத்தமா?.. கண்ணீர் வர சிரிச்சிட்டு இருந்தேன்.. ஆனா ஆப்கான் தகுதியானது – மிட்சல் மார்ஸ் பேட்டி

0
722
Marsh

கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்களாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் ஒரு கட்டத்தில் கண்களில் கண்ணீர் வர சிரித்துக் கொண்டிருந்தேன் என ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், பங்களாதேஷ் அணி 12.1 ஓவர் தாண்டி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி அரரைறுதிக்கு தகுதி பெறும் என்கின்ற நிலை இருந்தது. இந்த போட்டியை ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்பொழுது இந்த போட்டியின் போது திடீரென மழையின் காரணமாக போட்டியை தாமதப்படுத்த குல்பதின் நைப் காயம் என்று கீழே விழுந்தது, மேலும் போட்டி பல திருப்பங்கள் கொண்டதாக இருந்தது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் மனம் பிறந்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “குல்பதின் நைப் விழுந்த பொழுது நான் கிட்டத்தட்ட கண்களில் கண்ணீர் வர சிரித்துக் கொண்டிருந்தேன். நாளின் முடிவில் அவர் செய்தது போட்டியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே நாம் அது குறித்து சிரிக்கலாம். அது மிகவும் வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான ஒன்றாக இருந்தது.

- Advertisement -

நாங்கள் ஒரு குழுவாக இந்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம்.அது ஒரு அற்புதமான போட்டி. பல ட்விஸ்ட் அண்ட் டர்ன் இருந்தது.வெளிப்படையாக நாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர விரும்பினோம். ஆனால் அது எங்கள் கைகளில் இல்லாமல் இருந்தது. இதற்கு நாங்கள் எங்கள் மீது மட்டும்தான் குற்றம் சுமத்திக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து அரையிறுதி.. ரிசர்வ்-டே இருக்கா.. மழையால் போட்டி நடக்காவிட்டால் வெற்றி யாருக்கு?

பங்களாதேஷ் அணி கடைசி திட்டத்தை இழக்கும் பொழுது நாங்கள் மிகவும் பிளாட்டாகத்தான் இருந்தோம். நாங்கள் உலகக்கோப்பையில் தொடர ஆசைப்பட்டோம் ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு அது நியாயமான வெற்றி. அவர்கள் எங்களை வென்று அடுத்து பங்களாதேஷையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -