ஆஸி 2வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அந்த வீரர் தேவையில்லாத சுமை.. கம்பீர் மாற்றுவாரா?

0
150
Arshdeep

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது டி20 போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமைய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போது இந்திய ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நேற்று கான்பெரா மைதானத்தில் தொடங்கிய முதல் டி20 போட்டியில் மழையின் காரணமாக 10 ஓவர்களில் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

கம்பீரின் பழைய திட்டம்

தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் பேட்டிங் வரிசையை எட்டாவது இடம் வரையில் எடுத்துச் செல்வதற்காக கம்பீர் ஹர்ஷித் ராணாவை அந்த இடத்தில் வைத்திருக்கிறார். இதன் காரணமாக பும்ரா உடன் இணைந்து பந்து வீச வேண்டிய அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் ஆசிய மண்ணில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் கம்பீர் அணியை இறக்கி வந்தார். தற்போது ஆஸ்திரேலிய மண்ணிலும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் திட்டத்தை முதல் டி20 போட்டியில் கொண்டு வந்திருந்தார். இது எந்த அளவுக்கு கை கொடுக்கும்? என்று தெரியவில்லை.

- Advertisement -

10 ஓவர்களில் தெரிந்தது

தற்போது எட்டாவது இடத்தில் பேட்டிங் வேண்டும் என்பதற்காக ஹர்ஷித் ராணாவை வைப்பதை விட, அவருக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கை கொண்டு வந்தால், அவரால் எந்த இடத்திலும் பந்து வீச முடியும். மேலும் அவரே மூன்று ஓவர்கள் தொடர்ந்து பந்து வீச முடியும். இதன் மூலம் பும்ரா இரண்டு ஓவர் மட்டுமே வீசி கடைசியில் வீச இரண்டு ஓவரை வைத்துக் கொள்ளலாம்.

மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 97 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் எட்டாவது இடம் வரைக்கும் யோசிக்காமல் செயல்பட்டால், இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வலிமையாக்க முடியும். ஆனால் கம்பீர் இதை செய்ய மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : ரோஹித்தை விமர்சிக்கும் முன் தோனியை ஒரு தடவை பாருங்க.. இது தெளிவா புரியும் – கிரிஷ் ஸ்ரீகாந்த் பேட்டி

இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, கில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சிவம் துபே ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.

- Advertisement -