நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆறுதல் அளித்தது.
இந்த சூழ்நிலையில் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலகக் கோப்பை குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்து தோல்வி அடைந்தது. ஒரு நாள் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மான் கில் பேட்டிங்கில் இந்த தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முன்னாள் கேப்டன் ஆன ரோஹித் சர்மா ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது தரத்தை மீண்டும் உறுதி செய்தார். இதன் மூலமாக 38 வயதில் ரோஹித் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
இது இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் பெரிய அளவில் ஆறுதல் அளித்தது. எனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரு நாள் உலக கோப்பை வரை விளையாடுவார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வயது ஒரு காரணியாக இல்லாமல் இருப்பதற்கு ரோகித் சர்மா மற்றும் எம் எஸ் தோனி பெரிய உதாரணமாக இருக்கிறார்கள் என்று இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” வயது ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருக்கக் கூடாது என்பதை மட்டும் இந்த விஷயம் காட்டுகிறது. ரோகித் சர்மா இன்னும் பிட்டாக இருக்கிறார் அதனால் தான் அவர் 2023 ஆம் ஆண்டுகளாக கோப்பை மற்றும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரில் அற்புதமாக விளையாடினார். இப்போதும் எம் எஸ் தோனியை பாருங்கள். அவர் ஐபிஎல் தொடரில் 44 வயதிலும் ஃபிட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க:இதை தான் விராட் கோலி இந்திய அணிக்கு செய்வார்.. துணை கேப்டன் கில்லை பாராட்டிய தினேஷ் கார்த்திக்
விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடும் அவரது வேகத்தை பாருங்கள். அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இது ஃபிட்னஸ் குறித்தான கேள்வி மட்டுமே ஆகும். ஒரு நாள் தொடருக்கான தரவரிசை ரோஹித் மற்றும் விராட் கோலி இன்னமும் ஒரு நாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார்கள் என்பதை காட்டுகிறது. முதல் மூன்று இடங்களில் கில் ரோஹித் விராட் கோலி என மூவரும் நிச்சயமாக இருப்பார்கள்” என்று அவர் பேசியிருக்கிறார்.






