இந்திய கிரிக்கெட்

சூரியவன்சிய சும்மா தூக்கிடுவேன்னு எனக்கு தெரியும்.. ஏற்கனவே எழுதி வச்சு செஞ்சேன் – பிரஃபுல் ஹின்ஜே பேட்டி

நேற்று ஹைதராபாத் அணிக்காக தனது ஐபிஎல் முதல் போட்டியில் விளையாடிய பிரஃபுல் ஹின்ஜே நான்கு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டி குறித்து அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் பவர் பிளேவில் முதல் மூன்று ஓவர்கள் பந்து வீசிய அவர் வைபவ் சூரியவன்சி உட்பட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுகப் போட்டியிலேயே அவருடைய பந்து வீச்சு அசத்தலாக இருந்தது.

இயக்கும் சக்தியை நம்புகிறேன்

இது குறித்து பேசி உள்ள பிரஃபுல் ஹின்ஜே “நான் எனது முதல் போட்டியை ஐபிஎல் தொடரில் விளையாடும் பொழுது நான்கு அல்லது ஐந்து விக்கெட் கைப்பற்றுவேன் என எங்கோ எழுதி வைத்திருந்தேன். மேலும் பவர் பிளேவில் என்னால் முடிந்த வரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். மற்றவர்களைப் பற்றி தெரியாது நான் இயக்கும் சக்தியை நம்புகிறேன்”

“நான் சூரியவன்சிக்கு எதிராக பந்து வீசினால் முதல் பந்திலேயே பவுன்சர் மூலம் அவரை வீழ்த்தி விடுவேன் என்று சொல்லி இருந்தேன். மேலும் நான் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகளில் அவருடைய விக்கெட்தான் எனக்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அவர் நல்ல பார்மில் இருந்தார்”

- Advertisement -

13 வயதில் ஆரம்பித்தது

” எனக்கு லெதர் பால் என்னவென்றே தெரியாது. அப்பொழுது என் தந்தையிடம் அருகில் இருக்கும் ஒரு கிளப்பில் சேர்த்து விட சொன்னேன். ஆனால் நான் சிறியவனாக இருக்கின்ற காரணத்தினால் அவர் செய்யவில்லை. ஆனால் அந்த இடத்தில் இருந்துதான் என்னுடைய இந்த பயணம் ஆரம்பித்தது”

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணியில் அவர் இருப்பது வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே.. வேறு எதையும் அவர் சாதித்தது கிடையாது – முன்னாள் இந்திய கேப்டன் தாக்கு

“இந்த விருதை எனது குடும்பத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் எனக்காக மிகவும் கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். மேலும் எங்கள் அணியில் இருக்கும் பவுலிங் கோச் வருண் ஆரோன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். மேலும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by