பாண்டிங் ஃபோன் பண்ணி சொன்ன… அந்த 3 வருட விஷயம்.. ரொம்ப ஆச்சரியமா இருந்தது – பிரப்சிம்ரன் சிங் பேட்டி

0
125
Ponting

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் ரிக்கி பாண்டிங் இடம் கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பதாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைத்த இரண்டு வீரர்களில் இவர் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்கு இதுவரையில் தேர்வு செய்யப்படாத காரணத்தினால், இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் நான்கு கோடி ரூபாய்க்கு அன் கேப்டு பிளேயர் லிஸ்டில் தக்க வைத்திருக்கிறது. இவர் விக்கெட் கீப்பர் என்பதும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாடு

தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கை கொண்டு வந்திருக்கிறது. இந்த ஏழு வருடத்தில் மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் ஆறாவது தலைமை பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை நடைபெற்றுள்ள 16 ஆண்டு ஐபிஎல் சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் கடந்த பத்து வருடத்தில் ஒரு முறை கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த அணி தான் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக மோசமான செயல்பாடு கொண்ட அணியாக இருந்து வருகிறது.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் செய்த போன்

இந்த நிலையில் தான் ரிக்கி பாண்டிங் புதிய தலைமை பயிற்சியாளராக கொண்டு வந்து வலிமையான அணியை உருவாக்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் முயற்சி செய்கிறது. அதற்கேற்றபடி இரண்டே இரண்டு அன் கேப்டு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, ஓரளவுக்கு நட்சத்திரத்தன்மை வாய்ந்த அனைத்து வீரர்களையும் அந்த அணி நிர்வாகம் கழட்டிவிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் குறித்து பேசி இருக்கும் பிரப்சிம்ரன் சிங் கூறும் பொழுது “ரிக்கி பாண்டிங் என்னை அழைத்து பேசினார். அந்த அழைப்பில் நாங்கள் நன்றாக உரையாடினோம். அவர் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுதே என்னை அந்த அணிக்கு டிரேடிங் செய்வதற்கு மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்ததாக கூறினார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் தற்போது என்னுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்”

இதையும் படிங்க : கேஎல் ராகுல் சர்பராஸ் கான் வேண்டாம்.. இந்த 23 வயசு பையனை கொண்டு வாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

“நான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆவலாக இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். இப்போது என் மீது அணியின் உரிமையாளரும் நம்பிக்கை வைத்திருக்கின்ற காரணத்தினால், நான் துவக்க இடத்தில் நல்ல தொடக்கங்களை பெறுவதற்கு முயற்சி செய்வேன். என்னால் முடிந்தவரை நிறைய போட்டிகளில் அணியை வெற்றி பெற வைப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -