கேஎல் ராகுல் சர்பராஸ் கான் வேண்டாம்.. இந்த 23 வயசு பையனை கொண்டு வாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
320
Aakash

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் கேஎல்.ராகுல் மற்றும் சர்பராஸ்கான் இருவருக்கு பதிலாக இன்னொரு வீரரின் பெயரை ஆகாஷ் சோப்ரா பரிந்துரை செய்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நவம்பர் 22ஆம் தேதி விளையாடுகிறது. இதற்கு முன்பாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக தற்போது விளையாடிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

மரியாதையை காப்பாற்றிய பையன்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் நம்முடைய மரியாதையை கொஞ்சம் காப்பாற்றிய பையன் இருக்கிறார். அவர்தான் துருவ் ஜூரல். அவர் 80 ரன்கள் எடுத்தார் அதில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். மேலும் 186 பந்துகள் நின்று விளையாடினார். அதனால் இந்திய அணிக்கு கௌரவமான ஸ்கோர் வந்தது. இல்லையென்றால் 80, 85 ரன்கள் அவுட் ஆகக்கூடிய மோசமான சூழ்நிலை இருந்தது”

“ரிஷப் பண்ட் விளையாடும் அணியில் இருக்கும் பொழுது நீங்கள் இன்னொரு விக்கெட் கீப்பரையும் விளையாடும் அணியில் பார்க்கலாம். ஏனென்றால் இந்த இந்திய அணி மாறுவதற்கு தயக்கம் காட்டுவதில்லை என்று நமக்கு ஏற்கனவே சொல்லிவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜுரல் விளையாட வைக்கப்படுவார். இது மிகவும் சுவாரசியமான விஷயமாக இருக்கும்”

- Advertisement -

அபிமன்யு ஈஸ்வரன் எதற்காக தேர்வு செய்யப்பட்டார்?

” மேலும் கே எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு ரன்கள் எடுக்கத்தான் அனுப்பிவைக்கப்பட்டார். அவருடைய ஆறாவது இடத்தில் அனுப்பாமல் அவரை துவக்க ஆட்டக்காரராக அனுப்பினார்கள். ஏனென்றால் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடவில்லை என்றால் கேஎல்.ராகுல் முதல் டெஸ்டில் ஓபனராக வருவார். அவர் துவக்க வீரராக இருந்த பொழுது நல்ல முறையில் ரன்கள் எடுத்திருக்கிறார்”

இதையும் படிங்க : பறிபோகும் கம்பீர் பதவி.. பிசிசிஐ வைத்துள்ள செக்.. இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்.. முழு விபரம்

“இப்படி இருக்கும் பொழுது எதற்காக அபிமன்யு ஈஸ்வரனை அணிகள் தேர்வு செய்ய வேண்டும்? நீங்கள் தேர்வு செய்த அவரை தாராளமாக அங்கு விளையாட வைக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் துவக்க இடத்தில் கே எல் ராகுலை விளையாட வைக்க விரும்புகிறது என்று தெரிகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -