” தயவு செய்து எங்கள் உணர்வுகளை காயப்படுத்தி விடாதீர்கள் தோனி – ஹர்பஜன் சிங் உருக்கமான வேண்டுகோள்!

0
672

16வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டிகளில் முதல் போட்டியில் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை ஜெய்பூரிலும் இரண்டாவது நடைபெறும் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் எதிர்கொள்ள இருக்கிறது .

தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி குஜராத் அணியை விட ஒரு புள்ளிகளை பின்தங்கி இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

- Advertisement -

இந்தப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் இந்திய மகளிர் அணியின் உன்னால் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினர் . அந்தப் பேட்டியின் போது தோனியின் கேப்டன்சி குறித்தும் அவரது பேட்டிங் பற்றியும் விரிவாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் .

எம் எஸ் தோனி பற்றி பேசிய இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ” இந்த வருட ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்னர் மகேந்திர சிங் தோனி பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருந்தன . நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர் எவ்வாறு போட்டிகளை எதிர்கொள்ளப் போகிறார் என்ற ஐயம் எல்லோரிடமும் இருந்தது . அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் தோனி . களத்தில் அவரது தலைமை பண்பு மற்றும் அவரது பேட்டிங் இரண்டுமே இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் அமைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்,

அஜிங்கியா ரகானே போன்ற ஒரு வீரர் துணியின் தலைமையில் ஆடும் போது எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதிலிருந்து தோனியின் தலைமை பண்பு பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார் . மேலும் தொடர்ந்து பேசிய அவர் கேப்டனாக மட்டுமில்லாமல் வீரராகவும் தனது அணிக்கான பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார் தோனி என தெரிவித்தார் .

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங் ” எம் எஸ் தோனி நம்மை அவர் விளையாடும் காலத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார் . இந்தத் தொடரில் அவர் அடித்த இமாலய சிக்ஸர்களும் அவர் சேர்க்கும் ஒன்று இரண்டு ரண்களும் ஓய்வு பெற்றாலும் அவர் பழைய தோனி தான் என்பதை காட்டுகிறது என தெரிவித்தார் . மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் அவர் தன்னுடைய பழைய வேகத்தில் ரண்களை ஓடி எடுக்கவில்லை என்றாலும் பேட்ஸ்மேன் ஆக தோனி மிகவும் ஆபத்தானவராகவே இருக்கிறார் என தெரிவித்தார் . நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி எங்களது உணர்வை காயப்படுத்தி விடாதீர்கள் என உருக்கமான கோரிக்கை வைத்திருக்கிறார் ஹர்பஜன்

சிஎஸ்கே அணி இன்று கொல்கத்தாவுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்களுக்கு தகுதி பெறுவதோடு புள்ளிகளின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பையும் பிரகாசமாகும் . எனவே இந்த போட்டியில் வெற்றி பெற கண்டிப்பாக முயற்சி செய்வார்கள் . கடந்த போட்டியில் அணியின் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு சென்னை அணிக்கு மிகச் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .